பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தியானம் வெளியேயுள்ள பொருள் எதையும் பற்றிக் கவனி யாமல், (புலன்களின் மூலம் ஏற்படும்) உணர்ச்சிகளை யும் விட்டு, உலகப் பொருள் எதிலும் சம்பந்தமில்லாத தியானத்தில் ஆழ்ந்திருக்கும் போதுதான், ததாகதர்" கிம்மதியாக இருக்கிறார். தியானத்திலிருந்து ஞானம் உதயமாகிறது; தியானமில்லாவிடில் ஞானம் குறைகிறது. ஆக்கமும் கேடும் வரக்கூடிய இந்த இரு வழிகளையும் அறிந்து, அறிவு பெருகும் வழியை மனிதன் மேற்கொள் qnumrgot fr&. 1 품 எவன் தியானத்தின் முடிவான உபசாந்தியை அடைந்துள்ளானோ, எவன் பயத்தையும், பாசத்தை யும், பாவத்தையும் ஒழித்துவிட்டானோ, அவன் பிறவி யாகிய முட்களைக் களைக்தெறிந்தவன். (பல கந்தங் களால் அமைந்த) இந்தச் சடலமே அவன் (எடுக்க கேர்ந்த) கடைசி உடம்பாம்.1 ஐந்து வகைப் பாவனைகள் உள்ளன. முதலாவது பாவனை அன்பைத் தழுவிய மைத்திரீ பாவனை; இதிலே, உங்களுடைய பகைவர்கள் உள்ளிட்ட எல்லோருடைய கன்மையையும் விரும்பி உங்கள் மனம் ஒருங்லைப்பட்டிருக்கும்படி செய்து கொள்ள வேண்டும். "ததாகதர்-முன்னோர் வழியிலே செல்பவர் என்று பொருள்: இங்கு புத்தர்: புத்தர் பெருமான் தம்மைத் ததாகதரி என்று சொல்லிக் கொள்வது வழக்கம்,