இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நன்றென நடந்தான், நாங்களும் அவனொடு
சென்று டிப்டி ஜெயிலர் ஆபீசிலெம்
உடையினைக் களைந்தங் குவப்பொடு வைத்தெம்
எடையினைப் பார்த்ததில் * ஈரெட் டெட்டும்
ஒன்றும் இருந்தேன்; ஒழிந்த இருபவுண்
இன்றி சிவத்தின் எடையை நினைந்திலேன்.
ஜெயிலர் திரும்பினான். சிலவுடை சகிதம்
அயலில் ஒருவன் ஆஜரில் வந்தான்.
வாங்கி அவற்றை வழங்கவும் எமக்கே
ஏங்கினன் அவனும் எதிர்நின் றவரும்.
ஈரெட்டுஎட்டு - 128 பவுண்டு.
104