பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
துன்பத்தின் கற்பனை.

வறுமை வந்து விடுமோ என்ற அச்சத்தால் வருந்து கிறான், அல்லது தான் சுகமெனக் கருதுகின்ற நிலையற்ற ஒரு சாயையை அடைவதற்காக உலகத் தை வருத்துகிறான். சில வேளைகளில் ஆன்மா ஒரு மதத்தைத் தழுவுவதாலோ, ஒரு மனோதத்துவ சாஸ் திரத்தைக் கற்பதாலோ, ஒரு மனக்கொள்கையை அல்லது தொழிற்கொள்கையை அநுசரிப்பதாலோ தான் நிலையுள்ள அமைதியையும் சுகத்தையும் அடைந்துவிட்டதாகக் கருதுகின்றது. ஆனால், விலக்கமுடியாத ஓர் ஆபத்து அம்மதத்தைத் தகுதி யற்ற தாக்கிவிடுகின்றது ; அத்தத்துவ சாஸ்திரத் தைப் பயனற்ற தாக்கிவிடுகின்றது ; பல வருஷங்க ளாக வருந்திக் கைக்கொண்ட அக்கொள்கையை ஒரு நிமிஷத்தில் தூள் தூளாக்கி விடுகின்றது

' அப்படியானால் துன்பத்திலிருந்தும் துக்கத்தி லிருந்தும் தப்புவதற்கு மார்க்கம் இல்லையா? தீமை யின் கட்டுகளை அறுப்பதற்கு உபாயங்கள் இல்லை யா? ஸ்திரமான அமைதியும் நிலையுள்ள செல்வமும் நித்திய சுகமும் வெறுங் கனவுகளா? இல்லை. ஒரு மார்க்கம் இருக்கிறது ; அதனால் தீமையை வேரோடு களைந்து விடலாம்.ஓா் உபாயம் இருக்கிறது;அதனால் பிணியையும் வறுமையையும் மற்றையபிரதிகூலநிலை மைகளையும் சந்தர்ப்பங்களையும் அடியோடு நீக்கிவிட லாம். ஒரு முயற்சி இருக்கின்றது ;அதனால் வறுமை வருமோ என்ற அச்சமே உண்டாகாத ஸ்திரமான செல்வத்தை அடையலாம். ஓர் அப்பியாசம் இருக்

3