பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம். பொறாமைகளையும், உங்கள் சந்தேகங்களையும், உங்கள் கவலைகளையும், உங்கள் வெறுப்புக்களையும், உங்கள் சுயநய போகங்களையும் விட்டுவிடுங்கள் ; உங்கள் அஜீரணமும், உங்கள் சித்தமும், உங்கள் அச்சமும், உங்கள் கை கால் காவுகளும் உங்களை விட்டு நீங்கிவிடும். பலஹீனத்தையும் பாசத்தை யும் கொடுக்கிற இம் மனோநிலைமைகளை நீங்கள் விடாது பற்றிக்கொண்டிருப்பீர்களாயின், உங்கள் சரீரம் நோயை அடைந்த காலையில் தெய்வத்தின் மீது குறை கூறாதீர்கள், பின்வரும் கதை மனத்தின் சுபாவங்களுக்கும் சரீர நிலைமைகளுக்கு முள்ள நெருங்கிய சம்பந்தத்தை விளக்கும்:-ஒரு மனிதன் ஒரு கடுமையான நோ யால் வருந்திக்கொண்டிருந்தான். ஒருவன் பின் ஒரு வனாக ஒவ்வொரு வைத்தியனையும் பார்த்து அவன் மருந்து சாப்பிட்டான். ஆனால், அம்மருந்தெல்லாம் யாதொரு பயனையும் தரவில்லை. பின்னர், அவன் வியாதிகளை நீக்கும் - தீர்த்தங்களுள்ள ஸ்தலங்களுக் கெல்லாம் சென்று அவற்றில் மூழ்கினான் ; அவன் வியாதியோ முன்னினும் அதிகமாய் அதிக வருத் தத்தைக் கொடுத்தது. ஓர் இரவு அவனுடைய சொற்பனத்தில் ஒரு பெரியவர் தோன்றி, ஈகோத ரனே! வியாதியைத் தீர்க்கும் சாதனங்களையெல் லாம் செய்துவிட்டாயா?" என்று கேட்டார். அவன் " ஆம், எல்லாவற்றையும் செய்து விட்டேன்.” என்று பதில் சொன்னான், பெரியவர் <' இல்லை ; நீ