உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதிமந்தி

விக்கிமூலம் இலிருந்து


ஆதிமந்தி

[தொகு]

குறுந்தொகை: 31. மருதத்திணை

[தொகு]
(நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது.)


மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்கு வளை ஞெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆதிமந்தி&oldid=13106" இலிருந்து மீள்விக்கப்பட்டது