எட்டாத லட்சியம்
I
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி - என் காதலி
எந்த நேரமும் என் அருகிலே.
அவள் மின்னும் பாதம் தெரிகிறது,
அவள் ஆடையின் கீதம் கேட்கிறது.
II
அவள் அடியெடுத்து வைப்பதே அழகு ;
அவள் குழலை விரைந்து முடிந்துளாள்,
பின்னல் தோளிலே புரளும்,
இடைக்குக் கிழே சரிந்து தொங்கும்.
III
மைதானத்தில் என் முன் ஒடுவாள் ;
எல்லோரும் சென்று தேய்ந்த வழியில்
என்னையும் இழுத்துச் செல்கிறாள் ;
ஆனால் திரும்பி மட்டும் பார்ப்பதில்லை.
IV
ஆயினும் அவள் குரல் கனவில் கலந்து
நாளுக்கு நாள் என்னை அதிகமாய் மயக்கும்.
அந்தக் காதல் - குரல்! - ஐயோ!
அது முன்னிலும் தூரத்தில் போய்விட்டதே!
v
அடைவோம் என்ற நம்பிக்கை
அதிகமாய் இருந்த பொழுது
கவலையின்றிப் பின் தொடர்ந்தேன்.
இளமை யிருந்ததால் ஏமாந்து போனேன்.
ஆயினும் தொடரவே செய்கிறேன்,
ஆனால், நான் அவள் முகத்தை
என்றேனும் காணப் பெறுவனோ ?
பிரடரிக் லாக்கர்
33