engine
534
enhanced keyboard
பிட்ட நேரம்வரை பயன் படுத்தப்படாவிட்டால் குறைந்த மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு உறக்க நிலைக்கு மாறிவிடும். இது போன்ற கணினி, பசுமைக்கணினி (Green PC) என்று அழைக்கப்படுகின்றது. ஆற்றல் நட்சத்திர ஒட்டிகளை (Stickers) கொண்டிருக்கும்.
engine : எந்திரம் : ஒரு தரவு ஆதாரத்தைச் செயற்படுத்துகிற ஒர் ஊர்தியின் இயக்குவிசையாக விளங்கும் ஒரு செய்முறைப் படுத்தியின் மற்றொரு பெயர். வரைகலைச் செய்முறைப் படுத்தி போன்ற தனிவகைச் செய்முறைப்படுத்தி. எடுத்துக் காட்டு : தரவுத் தள எந்திரம். வரைகலை எந்திரம். செய்முறைப் படுத்தியின் கொச்சை வழக்கு.
engineering workstation : பொறியியல் பணிநிலையம்.
engineering units : பொறியியல் அலகுகள் : மாறிலி செயல்முறைக்குப் பயன்படுத்தப்படும் அளவைமுறை அலகுகள்.
enhanced graphics adapter (EGA) : மேம்பட்ட வரைகலை ஏற்பி;மேம்பட்ட வரைவியல் தகவி.
enhanced graphics display : மேம்பட்ட வரைகலைக் காட்சி.
Enhanced Integrated Drive Electronics EIDE : மேம்பட்ட ஒருங்கிணை இயக்க மின்னணுவியல் (இஐடிஇ) : ஒரு வட்டினை இயக்கக்கூடிய கட்டுப்பாடு மின்சுற்றுகள் உள்ளிணைக்கப்பட்ட வட்டு இயக்க வடி வமைப்பான ஐடிஇ தரமுறையின் விரிவாக்கமே இஐடிஇ. இவை, முறைமைப் பாட்டையில் (system bus) தரப்பட்ட இடை முகங்களை இணைக்க உதவுகின்றன. முன்னில்லாத வெடிப்புத் தரவு பரிமாற்றம்- நேரடித் தரவுஅணுக்கம் போன்ற கூடுதல் சிறப்புக் கூறுகள் உள்ளன. அது மட்டுமின்றி இஐடிஇ இலக்கம் 8. 4 கிகாபைட்டுகள் வரை ஏற்கும். (ஐடிஇயில் 528 மெகா பைட்டு வரைதான்). ஏடீஏ-2 இடைமுகப்பை ஏற்கும். வினாடிக்கு 13. 3 எம்பி தரவு பரிமாற்றம் சாத்தியம் (ஐடிஇ யில் 3. 3 எம்பி தான்). ஸ்கஸ்ஸி (SCSI) இயக்கங்கள் அளவுக்குத் திறனுடையது. ஆனால் அவற்றைவிட விலை மலிவானது.
enhanced keyboard : உயர்த்திய விசைப்பலகை : 101 விரற்விசைகள் உள்ள IBM விசைப்பலகை. இது, PC, AT விசைப்பலகைக்கு பதிலாக உருவாக்கப்
பட்டது. இதில் முதலிலிருந்து எண்