உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 & லா. ச. ராமாமிர்தம்

அடையாய் கனத்துப் பிரிபிரியாய் அவன் மானங்களை மறைக்கிறது. தானாகவே மூடிக்கொள்ள அவள் முற்பட வில்லை. அந்த உணர்வேயில்லை. அப்படியொன்றும் அழகில்லை. ஆனால் அந்த உடம்பில் ததும்பிய ஆரோக்கியமே அவளுடைய பிரகாசமாய் ஒளிர்கின்றது.

பிறந்த மேனியில் அவளைப் பார்க்க எனக்கு விகல்ப மாயில்லை. ஸர்வ இயல்பாயிருந்தாள். என் ஆண் உக்ரம் விழித்ததேயன்றி என்னைத் தாக்கவில்லை. அந்த விழிப்புக் கூட ஏதோ உண்மைக்கருகே என்னைக் கொண்டு செல்லும் சதையுரிப்புத்தான்.

சிரித்தவள், நீர்வீழ்ச்சித் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். அதனுள் நுழைந்து போய்த் தேடியும் கிடைக்க வில்லை. நீரோடு கரைந்து போய் விட்டாளா? அவள் சிரிப்பு மட்டும் உட்செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதென்ன சிரிப்பு? “என்னைப் பார், என் அழகைப் பார்” என்று கேலியா?

இதற்கு முன் இவளை எங்கேனும் பார்த்திருக்கிறேனா? அதெப்படிச் சாத்தியம்? ஆனால் அப்படித் தோன்றக் காரணம் என்ன? இது ஏதோ கனவுக் கலக்கம் என்று இந்த அரைத் தூக்கத்திலேயே தெரிகிறதே! ஆனால் உள்ளுணர்வு ஏற்க மறுக்கிறது. இது எப்பவோ கண்ட நினைவு முகம் மனசாட்சி உறுத்துகிறது. இங்கு மனசாட்சி எங்கே வந்தது? அது என்னை இழுக்க என்ன குற்றம் செய்து விட்டேன்? காலப்போக்கின் பின்னோக்கிய துரத்தில், ஞாபகம் என்னதான் மங்கிப் போனாலும் சம்பவத்தின் ஆதாரம் இல்லாமல் நினைவு கூற முடியாது என்று ஒரு வாதம் இருக்கிறது. அந்த ரீதியில், கற்பனை என்பதேயில்லை. எல்லாமே நேர்ந்தது-நிகழ், எதிர் என்ற காலத்தின் சீட்டுக் குலுக்கல்தான். ஆகவே இவள் யார்? இந்த அளவுக்கு இவள்