இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
540
தாவரக் குடும்பம் | : | கன்வால்வுலேசி (convolvulaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஆப்பர்குலைனா (Operculina) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | டர்பீத்தம் (turpethum) |
சங்க இலக்கியப் பெயர் | : | பகன்றை |
உலக வழக்குப் பெயர் | : | பகண்டை |
தாவர இயல்பு | : | ஒரு பெரிய கொடி. |
தண்டு | : | தண்டு, இலைக் காம்பு, மலர்த் தண்டு முதலியவை சிறகு பெற்றது போன்று அகன்று இருக்கும். |
இலை | : | முட்டை அல்லது இதய வடிவான பெரிய தனியிலை. |
மஞ்சரி | : | தனி மலர் பெரியது. இலைக்கோணத்தில் தனித்து உண்டாகும். மலரடிச் செதில் எளிதில் உதிர்ந்து விடும். |
மலர் | : | பெரியவை, வெண்ணிறமானவை. |
புல்லி வட்டம் | : | 5 பெரியவை. முட்டை வடிவான, பளபளப்பான, புறவிதழ்கள் உதிராமல், கனியுடன் வளர்ந்து, ஒட்டியிருக்கும். |
அல்லி வட்டம் | : | புனல் வடிவானது. 5 அகவிதழ்கள் இணைந்திருக்கும். 5 பட்டையான கோடுகளை உடையது. |
மகரந்த வட்டம் | : | 5. தாதிழைகள் மெல்லியவை. அடியில் அகன்றிருக்கும். தாதுப் பைகள் பெரியவை. முறுக்கி விட்டாற் போன்றவை. |
சூலக வட்டம் | : | பளபளப்பானது. 2 செல் உடையது. 4 சூல்களை உடையது. சூல் தண்டு இழை போன்று மெல்லியது. சூல்முடி 2 உருண்டைகளை உடையது. |
கனி | : | ‘காப்சூல்’ என்ற வெடி கனி; விதைகள் பெரியவை. கரிய வழவழப்பானவை. கருவேர் பெரியது. |
இதன் முன்னைப் பெயர் | : | ஐபோமியா டர்பீத்தம் |