பக்கம்:எழில் விருத்தம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

வாணிதாசன்



உழைப்பினைப் பொதுமை ஆக்கி
   உருப்பெறும் விளைவை எல்லாம்
பிழைப்பவர் பகிர்ந்து துய்க்கப்
   பேணுதல் பொதுமை ! ஆனால்
உழைப்பினை விளைவை எல்லாம்,
   மணிக்கூண்டே ! உனக்கெண் ணாமல்
அழைத்துவாழ் மக்கட் கீயும்
   அருஞ்செயற் கீடும் உண்டோ? ......................................9

அறிவினால் பிறந்தாய்; வாழும்
   அழகூரின் நடுவில் நின்றாய்;
நெறியொடு காலங் காட்டும்
   நீர்மையை நினைக் குந் தோறும்
அறிவுக்கே உலகம் அண்டம்
   அணுவுமே அடிமை யாகும்!
அறிவுக்கு வணக்கம் செய்வோம்!
   அறிவினைப் பெருக்கு வோமே! ...................................10

"சிர்விள மாச்சி தேமாச்

சிரிணைந் திரட்டு மீங்கே

"

என்னும் ‘விருத்தப் பாவியல்' நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.

விளம் என்ற இடத்துக் கூவிளம், கருவிளம்_இரண்டும், மா என்ற விடத்துத் தேமா, புளிமா இரண்டும் கொள்க.

விளச்சீர் வரும் என்று விதித்த இடத்தில் தேமாங்காய், புளிமாங்காய்ச் சீர்களும் வரும் என்று அறிக.

இறுதிச்சீர் தேமாவாகவே வருதல் வேண்டும் எனக் கொள்க.