பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க௭௪

ஒப்பியன் மொழி நூல்

imagine(உன்னம்— imagination); உன்னி , toguess (கன்னிப்பு— guessing); எண(னு). to deliberate. to coasider (எண்ணம்— consideration), கருது, to conceive, to think (கருத்து— concept, idea) அறி, to kaow (அறிவு— kaowledge); கொள், to opine (கோள்— opinion, கொள்கை— doctrine); மதி, to estinate, to regard (மதிப்பு— estination, approximation, respect, மதி—sense); தீர்மானி, to determine, to resolve; நய, to appreciate (நயப்பு—appreciation); தெருள், to perceive clearly : மருள், to be deluded ; ஆய், to test, to examinc, (ஆய்வு— test); ஆராய், to make a critical study, to investigate (ஆராய்ச்சி—research, critical study); சூழ், to Calmisel, to deliberate குழவை—council.

உளத்தொழில் பற்றி இன்னும் பல சொற்களுள, இவற் தொடு துணைவினை சேர்த்துக்கொள்ளின், இக்காலத்திய மனத்தொழில் நுட்ப வேறுபாடு பற்றிய கருத்துக்களை யெல்லாம் குறிக்கச் சொற்களை யமைத்துக் கொள்ளலாம்

மனைவிக்குக் கணவனோடுள்ள புலவியின் மூன்று நிலைகளையுங் குறித்தற்கு,முறையே கடல், புலவி, துனி என மூன்று சொற்கள் உள்ளன.

ஒரு வினைக்குத் தகுந்த சமையும், நல்ல கருத்தில் செவ்வி என்றும் தீய கருத்தில் அற்றம் என்றும் கூறப்படுகின்றது.

தமிழின் சொல்வளத்தை நன்றாயுணர்தற்கு நிலைத் தினைச் சொற்களை நோக்கவேண்டும்.

முதலாவது உள்ளீடுள்ள நிலைத்திணை யுயிரிகளை மர மென்றும், அஃதில்லா தவற்றைப் புல்லென்றும் இருவகையாக வத்தனர் முன்னோர்.

"புறக்கா ழனவே புல்லென மொழிப்" (மரபு 81.)
"அகக்கா முனவே மரமென மொழிப்"(மரபு. 21)

என்பன தொல்காப்பியம்.

நிலைத்திணை புறுப்புக்களில் ஒவ்வொன்றிற்கும் அதனதன் நுட்ப வேறுபாட்டிற்கேற்ப வெவ்வேறு பெயருளது.

இலையென்னும் ஒரேயுறுப்பிற்கு நால்வேறு சொற்களுன. மா வாழை முதலியவற்றினது இலை யென்றும், நெல் கேழ்வரகு முதலியவற்றினது தான் என்றும், கரும்பு, பெருஞ்