உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௧௦

ஒப்பியன் மொழி நூல்

அம் = பூதம். பேய்களிற் பெரியது பூதம். உலகின் ஐம்பெருங் கருவிப்பொருள்கள் ஐம்பூதம் எனப்பட்டன.

இந்தியா, எகிப்து, சீனம் ஆகிய நாடுகள் பண்டைக் காலத்தில் மாந்திரிகத்திற் சிறந்திருந்தன.

பேய்களைத் தெய்வம் என்பது, இருவகை வழக்கிலும் தொன்று தொட்டு இன்றுவரை யுள்ளது.

(4) நடுகல் தெய்வம்.

“காட்சி கல்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தல்” (புறத். 5.)

என்பது தொல்காப்பியம்.

மதுரை வீரன், மாடசாமி, கருப்பசாமி முதலியவை நடுகல் தெய்வங்களே.

(5) கற்புத் தெய்வம்.

கண்ணகி வரலாறு காண்க:

(6) தென்புலத்தார் வணக்கம் - Aacestor Worship.

பண்டைத் தமிழர், இறந்து போன தம் முன்னோரைத் தென் புலத்தார் என்று பெயரிட்டுச் சமையம் வாய்க்கும் போதெல்லாம் வணங்கி வந்தனர். இது முன்னோரை நினைவு கூர்வதும் பெரியோர்க்குச் செய்யும் மதிப்புமாகும். இது சீன நாட்டில் மிகுதியாக வுள்ளது.

”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை”

என்றார் திருவள்ளுவர்.

(7) நிலா வணக்கம்.

நிலாவும் ஒருகாலத்தில் வணங்கப்பட்டதைப் 'பிறை தொழுகென்றல்' என்னுங் கோவைத்துறையா லறியலாம்,

நால்வேள்வி :

வேள் + வி = வேள்வி. வேட்டல் விரும்பல், விருப்பத்தோடு பிறரை யுண்பிப்பது வேள்வி