உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1 வர்த்தி என்ற பட்டமும் 1090-ல் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டமும் புனைந்து கொண்டு பல்வகையாலும் பெருமையும் புகழும் எய்தி இனிது வாழ்ந்துவந்தான். திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டம் புனைந்து ஆட்சி புரிந்த சோழ மன்னருள் இவனே முதல்வன் ஆவான். இவனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்த இவனது வழித்தோன்றல்களுள் ஒவ்வொரு வரும் இப்பட்டம் புனைந்தே அரசாண்டுவந்தனர். 'திரிபுவன சக்கரவர்த்தி' என்ற தொடர் மொழி சேரமண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் ஆகிய மூன்றுக்கும் சக்கரவர்த்தி என்ற பொருளை யுணர்த்து வதாகும்.

இங்ஙனம் பெருமையுடன் வாழ்ந்துவந்த குலோத்துங்கன் நாட்டிற்கு நலம்புரியக் கருதி முதலில் ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் அரசர்க்கு நெடுங்காலமாகச் செலுத்திவந்த சுங்கத்தை நீக்கினான். ஓர் அரசன் தன் நாட்டிலுள்ள எல்லா மக்கட்கும் னிமை பயப்பனவாகப் பொதுவாகச் செய்யக்கூடிய நலங்களுள் இதனினும் சிறந்தது வேறு யாதுளது? இதனால் மக்கள் எல்லோரும்

வனை வாயாரவாழ்த்திச் 'சுங்கந்தவிர்த்த சோழன்' என்று வழங்குவாராயினர். 'தவிராத சுங்கந்தவிர்த் தோன்' என்று புலவர் பெருமக்களும் இவனைப் புகழ்ந்து பாராட்டினர். தஞ்சாவூரைச் சார்ந்த கருத்திட்டைக் குடி இவனது ஆட்சிக்காலத்தில் சுங்கந் தவிர்த்த சோழனல்லூர் என்ற பெயரும் எய்திற்று. பின்னர், சோழமண்டலம் முழுவதையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளவாறு அறிந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்தல் இயலாது என்று கருதி, அதனை முற்றிலும் அளக்குமாறு ஆணையிட்டான். அவ்வேலையும் இவன் பட்டமெய்திய பதினாறாம் ஆண்டாகிய கி.பி. 1086ல் தொடங்கப் பெற்று, இரண்டு ஆண்டுகளில் முடிவுற்றது.3 பிறகு, இவன், குடிகள் எல்லோரும் ஆறிலொரு கடமை நிலவரி செலுத்திவருமாறு ஏற்பாடு செய்தான். இங்ஙனமே வனது பாட்டனுக்குத் தந்தையாகிய முதலாம் இராசராசசோழன்

1. S.I.I. Vol. III. page 131.

2. குலோத்துங்கசோழனுலா - வரி 52.

3. The Historical Sketches of Ancient Dekhan, page 358.