கலைக்களஞ்சியம்/அழகிய மணவாளச்சீயர்

விக்கிமூலம் இலிருந்து

அழகிய மணவாளச்சீயர் : (சு. 12ஆம் நூ.) பெரியவாச்சான் பிள்ளையினுடைய மாணவர்; திருவாய் மொழிக்குப் 'பன்னீராயிரப்படி' என்னும் வியாக்கியானத்தைச் செய்தவர் ; துறவி; பரசமயகோளரியாக விளங்கினராதலின் வாதி கேசரி என்ற சிறப்புப் பெயரைச் சேர்த்து, 'வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர்' என்று அழைக்கப்படுகிறார்; திருவரங்கத்தில் வாழ்ந்தார். இவர் செய்த வேறு பல நூல்களும் உண்டு . பு. ரா. பு.