கலைக்களஞ்சியம்/ஆட்லர், ஆல்பிரடு

விக்கிமூலம் இலிருந்து

ஆட்லர், ஆல்பிரடு (Adler Alfred) (1870- 1937) ஆஸ்திரிய உளவியலார். முதலில் பிராய்டின் கொள்கையை ஏற்றுக்கொண்டிருந்தார். அதன் பிறகு மனிதனுடைய நடத்தையை விளக்கப் பால் உணர்ச்சி (Sex Impulse)யைவிட அதிகார உணர்ச்சியே (Will to Power) பெரிதும் துணைசெய்யும் என்று கருதினார். மனக்கோளாறுகளை விளக்குவதற்குத் தாழ்வுணர்ச்சிக் கோட்டம் (Inferiority Complex) என்னும் கருத்தைப் பயன்படுத்தினார். அவர் பிராய்டு, யுங் ஆகியவர்களுடன் சேர்ந்து உளவியலை ஒரு புதிய படியில் ஏற்றி வைத்தார். பெ.