குறுந்தொகை
Wikisource தளத்திலிருந்து
[தொகு] குறுந்தொகை
கடவுள் வாழ்த்து
- தாமரை புரையும் காமர் சேவடிப்
- பவளத் தன்ன மேனித் திகழொளிக்
- குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
- நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேல்
- சேவலங் கொடியோன் காப்ப
- ஏமம் வைக லெய்தின்ற லுலகே
-
- -பாரதம் பாடிய பெருந்தேவனார்.
-
பாடல் 1:
குறிஞ்சி - தோழி கூற்று
- செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
- செங்கொ லம்பிற் செங்கோட்டி யானைக்
- கழல்தொடிச் சேஎய் குன்றம்
- குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
-
- -திப்புத் தோளார்
-
பாடல் 2:
குறிஞ்சி - தலைவன் கூற்று
- கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
- காமம் செப்பாது கண்டது மொழிமோ
- பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
- நறியவும் உளவொ றீயறியும் பூவே.
-
- -இறையனார்
-
பாடல் 3:
குறிஞ்சி - தலைவி கூற்று
- நிலதினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
- நீரினும் ஆரள வின்றே சாரல்
- கருங்கோற் குறுங்சிப் பூக்கொண்டு
- பொருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
-
- -தேவகுலதார்
-
பாடல் 4:
நெய்தல் - தலைமகள் கூற்று
- நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
- இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
- அமைதற் கமைந்தநங் காதலர்
- அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே
-
- -காமஞ்சேர் குளத்தார்
-
பாடல் 5:
நெய்தல் - தலைவி கூற்று
- அதுகொல் தோழி காம நோயே
- வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
- உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
- மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
- பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.
-
- -நரிவெரூ உத்தலையார்
-
பாடல் 6:
நெய்தல் - தலைவி கூற்று
- நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
- தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
- நனந்தலை உலகமும் துஞ்சும்
- ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
-
-
- -பதுமனார்
-
பாடல் 7:
பாலை - கண்டோர் கூற்று
- வில்லோன் காலன கழலே தொடியோள்
- மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
- யார்கொல் அளியர் தாமே ஆரியர்
- கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
- வாகை வெண்ணெற் றொலிக்கும்
- வேய்பயில் அழுவம் முன்னி யோரே.
-
-
- -பெரும்பதுமனார்
-
பாடல் 8:
மருதம் - காதற் பரத்தை கூற்று
- கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
- பழன வாளை கதூஉ மூரன்
- எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
- கையும் காலும் தூக்கத் தூக்கும்
- ஆடிப் பாவை போல
- மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.
-
- ஆலங்குடி வங்கனார்.
-