திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-ஞவ்வருக்கம்

விக்கிமூலம் இலிருந்து

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை[தொகு]

ஆசிரியர்: தெரியவில்லை[தொகு]

வ்வருக்கம்-04 பாடல்கள் [தொகு]

(இரவுக் குறியிடையீடு

(தலைவன் வருந்தொழிற்கு அருமை சாற்றல்)

பாடல் 36 (மலிகுரைக்கு)[தொகு]

ஞமலி குரைக்குமென் றாயுறங் காளிந் நகர்முழங்கும் ()ஞமலி குரைக்கும் என் தாய் உறங்காள் இந் நகர் முழங்கும்

விமல நிலாவுக்கு மூர்காவ லர்க்கும் விளக்கமுண்டு () விமல நிலாவுக்கும் ஊர் காவலர்க்கும் விளக்கம் உண்டு

கமல விலோசன ராதி வராகர் கரந்தையன்னீ ()கமல விலோசனர் ஆதி வராகர் கரந்தை அன்னீர்

ரமர்செயுஞ் சேவற் குடிஞையென் னாமிங் கவர்வரவே. (01)அமர் செயும் சேவல் குடிஞை என் ஆம் இங்கு அவர் வரவே.


()


(பாங்கன் தலைவனைத் தேற்றல்)

பாடல் 37 (ஞாலத்தை வாழ்வித்த)[தொகு]

ஞாலத்தை வாழ்வித்த ஞானப்பி ரான்சந்த னாசலத்தி () ஞாலத்தை வாழ்வித்த ஞானப் பிரான் சந்தன அசலத்தின்

னீலத்தை நேரும் நெடுங்கா வியங்க ணிரைவளையார் ()நீலத்தை நேரும் நெடும் காவி அம் கண் நிரை வளையார்

கோலத்தை நான்சென்று கண்டுவல் லேவந்து கூறுமட்டுஞ் () கோலத்தை நான் சென்று கண்டு வல்லே வந்து கூறும் மட்டும்

சீலத்தை யாய்ந்த திறலாய் திருவுளந் தேறிநில்லே. (02) சீலத்தை ஆய்ந்த திறலாய் திரு உளம் தேறி நில்லே.


பாங்கி மதியுடம் பாடு

தோற்றங் கண்டு ஐயுறல்

பாடல் 38 (ஞெ)ண்டாரலவன்[தொகு]

ஞெண்டா ரலவன் பயில்வேறு கண்டுதெண் ணீர்க்கமல () ஞெண்டார் அலவன் பயில் வேறு கண்டு தெள் நீர்க் கமல

வண்டா ரிசைக்குங் கரந்தை வராகன் வரையிவர்க்குத் ()வண்டார் இசைக்கும் கரந்தை வராகன் வரை இவர்க்குத்

தண்டா ரளகமுந் தானையுங் கொங்கைத் தடமுவெவ்வே () தண் தார் அளகமும் தானையும் கொங்கைத் தடமும் வெவ்வேறு

றுண்டா கியகுறி கண்டே வெருண்டதென் னுள்ளமின்றே. (03) உண்டாகிய குறி கண்டே வெருண்டது என் உள்ளம் இன்றே.

(பிறைதொழுகென்றல்)

பாடல் 39 (ஞொ)ள்காத[தொகு]

ஞொள்காத கேள்வியர் கேண்மையு மிங்கித நோன்மையுநேர் () ஞொள்காத கேள்வியர் கேண்மையும் இங்கித நோன்மையும் நேர்

வெள்காது யாரும் விரும்பு வராற்கரு மேகபந்தித் ()வெள்காது யாரும் விரும்புவரால் கரு மேக பந்தித்

தெள்கா மணக்குங் கரந்தை வராகர் சிலம்புமின்னே () தெள் கா மணக்கும் கரந்தை வராகர் சிலம்பு மின்னே

யெள்காது நாமுந் தொழவே தகுமிவ் விளம்பிறையே. (04) எள்காது நாமும் தொழவே தகும் இவ் இளம் பிறையே.

பாடல் 28 ()[தொகு]

()

()

()

(60)


பாடல் 29 ()[தொகு]

()

()

()

(60)



பார்க்க[தொகு]

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-உயிர்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-கவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-சவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-தவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-நவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-பவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-மவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-யவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-வவ்வருக்கம்