திருக்குறள், மூலம்/ஊடல் உவகை

விக்கிமூலம் இலிருந்து

133. ஊடலுவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு. 1321

ஊடலின் தோன்றும் சிறுதுணி நல்லளி
வாடினும் பாடு பெறும். 1322

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து? 1323

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை. 1324

தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலினாங்கொன்று உடைத்து. 1325

உணலினும் உண்டது அறல்இனிது; காமம்
புணர்தலின் ஊடல் இனிது. 1326

ஊடலில் தோற்றவர் வென்றார்; அதுமுன்னும்
கூடிலில் காணப் படும். 1327

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு? 1328

ஊடுக மன்னோ ஒளியிழை; யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா. 1329

ஊடுதல் காமத்திற்கு இன்பம், அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். 1330

திருக்குறள் முற்றிற்று.