திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 133 முதல் 134 வரை

விக்கிமூலம் இலிருந்து
"சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!...அது எர்மோனின் மலைப்பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதற்கு ஒப்பாகும்" (திருப்பாடல்கள் 133:1,3).

திருப்பாடல்கள்[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 133 முதல் 134 வரை

திருப்பாடல் 133[தொகு]

சகோதர அன்பின் சிறப்பு[தொகு]

(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்;
தாவீதுக்கு உரியது
)


1 சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று,
எத்துணை இனியது!


2 அது ஆரோனின் தலையினிலே
ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம்
அவருடைய தாடியினின்று வழிந்தோடி
அவருடைய அங்கியின் விளிம்பை
நனைப்பதற்கு ஒப்பாகும்.


3 அது எர்மோனின் மலைப்பனி
சீயோனின் மலைகள்மேல் இறங்குவதற்கு ஒப்பாகும்;
ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள வாழ்வென்னும்
ஆசிதனை ஆண்டவர் பொழிந்தருள்வார்.


திருப்பாடல் 134[தொகு]

ஆண்டவரைப் போற்றுதல்[தொகு]

(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)


1 இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில்
பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே!
நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.


2 தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி
ஆண்டவரைப் போற்றுங்கள்.


3 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர்
சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவராக!


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 135 முதல் 136 வரை