திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/012.அருள் இருபா இருபஃது

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



12. இருபா இருபஃது[தொகு]

இலக்கணம் :- இருவேறு வகையான யாப்புகள் ஒன்றன்பின் மற்றொன்றாகத் தொடர்ந்து வர இருபது பாடல்கள் அமையுமாறு இயற்றப்படுவது “இருபா இருபஃது” என்னும் இவ்விலக்கிய வகையாகும்.

வெள்ளை அகவல் பின்னர் முறைவைத்
தெள்ளா தியல்வது இருபா இருபஃது 
- பன்னிரு பாட்டியல்  - 220
வெள்ளைமுன் அகவல்பின் விரவின்
இருபான் இயம்புவது இருபா இருபஃது
- பிரபந்த மரபியல்  - 8
இருபா விருபதே ஈரைந்து வெண்பா
ஈரைந்து அகவல் அந்தாதித்து இசைத்தலே
- பிரபந்த தீபம்  - 10

தனக்குவமையில்லாத, தன்னேரில்லாத் தனித்தலைமைப் பெரும்பதி, அருட்பெரும் சோதியர், அறவாழி அந்தணர் எளியேனின் இன்னுயிர் நாயகர், எம்பெருமான், பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருவருட் பெரும்புகழை வெண்பாவும் ஆசிரியப்பாவும் விரவ அந்தாதித்து இருபஃது பாடல்களால் விதந்தோதுவது இப்பனுவல்.

அருள் இருபா இருபஃது

காப்பு

நேரிசை வெண்பா

குருதேவ தேவே அறியாமை மாய்த்து
இருள்நீக்கிப் பேரொளியை ஏற்றும் - அருளால்
இருபா இருபஃதாய் ஏர்புகழைப் பாடத்
திருத்தாளே காப்பாகும் சீர்

நூல்

நேரிசை வெண்பா

உயிர்க்குயிராய் நின்று உற்றுணர்ந்தோர்க் கெல்லாம்
செயிர்தீர் திருக்காட்சி நல்கி - மயல்தீர
மெய்ம்மை துலங்க வெவ்வினைகள் தீர்ந்துய்ய
தெய்வம் அருள்வீர் வரம் (1)

நேரிசை ஆசிரியப்பா

வரந்தந் தெமையாள் மெய்வழி தெய்வம்
அரனும் அயன்மால் அனைவர் ஓருரு
ஆகிய ஐயன் அகிலவர் உய்ய
பூகயி லாயம் பொன்னரங் கம்மெனும்
சாலை தன்னில் திருவருள் புரியும்
ஏல வல்லார் எம்பிரான் இறவா
இன்பத் திருத்தி இருவினை தீர்த்து
துன்பம் தொலைத்து துகடமி லாத
நற்பதம் நல்கும் நாடினோர்
பொற்பதம் பெறுவர் பெரும்பே ரின்பம் (2)

நேரிசை வெண்பா

பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழவைக்கும்
சீரின்ப நித்யம் சிறக்குமே - பாரினிலே
வையகமும் வானகமும் ஈடில்லா மாட்சியராம்
மெய்வழி தெய்வம் அறி. (3)

நேரிசை ஆசிரியப்பா

அறிவுரு வாகி அருள்வடி வேற்று
செறிதரு பிரம்மம் என்றே போற்ற
மறைமுதல் தெய்வம் வந்தவ தரித்து
மறைதெளி வுறவும் இறைநிலை துலங்கும்
துறையறி வித்துத் தூமணி மன்றில்
உறைமுறை தெரிவித் தும்பர்தம் பதத்தில்
நிறையொளி வீட்டில் நீடினி திருத்தும்
இறைதவிர்த் துய்க்கும் கோமான் மெய்வழி
ஆண்டவர் தயவால் ஜீவன்
மீண்டுஉய்ந் திடவே வந்தனம் உலகில் (4)

நேரிசை வெண்பா

உலகில் இவர்ந்தனம் உய்கதி பெறவே
அலகில் அருளார்மெய் தெய்வம் - இலங்கும்
சாலை வளநாட்டில் சார்ந்திருத்தல் மெய்வணக்கச்
சீலத் தவப்பலனுக் காம் (5)

நேரிசை ஆசிரியப்பா

ஆமனு மெய்வழி ஆண்டவர் பதியில்
சேமமிக் கிருந்து திருவளர் குருகுல
வாசம் செய்யில் வணக்கப் பலன்இறை
நேசம் மிகுந்தால் நீறுமுத் தாபம்
ரோகம் தரித்திரி யம்முதல் தாபம்
வேகச் சாவுதுர் மரணம் இரண்டாம்
திண்டா டும்கடை நாளின் துன்பம்
மண்டும் மூன்றாம் தாபம் என்பர்
ஆன்றசற் குருதய வற்புதச் செல்வம்
சான்றோர் சேர்க்கும் தவப்பெரு நிதியம்
அதுபெற வம்மின் ஐய!
இதமிகு மெய்வழி உய்வழி அறிமின்! (6)

நேரிசை வெண்பா

அறிமின் அறவாழி அந்தணர் மெய்த்தெய்வம்
இறவா வரம்புவியோர்க் கீயத் - திறமோங்கு
உத்யோ வனச்சோலை ஒண்பொழிலார் சாலையினில்
நித்தியராய் வந்தார் இனிது. (7)

நேரிசை ஆசிரியப்பா

இனிது இனிது எம்மான் கற்பகக்
கனிச்சுவை விஞ்சக் கற்றல்வே தாந்தம்
இனிது திருவாய் அமிர்தவாக் கியங்கள்
புனிதம் மான்மியம் ஓதிப் பராவுதல்
நனியுயர் தேடு கூடகம் பாடுதல்
இனிதிறை வணக்கம் இயற்றல் நற்றவம்
பாரா வணக்கம் பார்த்தல் புண்ணியம்
சீராய் மூல மந்திரம் ஜெபித்தல்
தனித்தலை மைப்பதி தெய்வம்
இனிதக லாதுறை வாரித யத்தே! (8)

நேரிசை வெண்பா

இதயத்தே என்றும் இலங்குகின்ற தெய்வம்
உதயஞ்செய் தார்ஞாலம் உய்ய - இதமோங்க
ஒன்றே குலம் இறையும் என்றே சமரசமாய்
நன்றே நிறுவும் நயந்து (9)

நேரிசை ஆசிரியப்பா

நயந்தார் மெய்வழி நலமுற் றோங்கு
இயைந்தார் இறைவர் இன்னருள் பெற்று
எமபடர் கடந்து அமரமெய் நிலைகொண்(டு)|r}}
இமையா நாட்டத் திருந்துய்ந் திடுவர்
சமரச வேதர் தருமமெய் வேந்தர்
கமழும் செண்பக நறுமண மேனியர்
எமையும் ஒருபொரு ளென்றன் றேன்றவர்
அமரா பதியர் அருண்மலர்த் தாள்கள்
தஞ்ச முற்றவர் என்றும்
வஞ்ச எமன்படர் தாண்டி வாழ்வரே! (10)

நேரிசை வெண்பா

வாழ்வார்கள் வானவர்கோன் மாதவத்தார் பொற்றாளில்
ஆழ்வார்கள் அண்டர்நா டாள்வார்கள் - சூழ்வார்கள்
ஐயர் திருப்புகழை அல்பகலாய்த் தோத்தரித்து
மெய்பெற்று மேலோங்கு வார். (11)

நேரிசை ஆசிரியப்பா

ஓங்குக மெய்வழி உலகெலாம் தழைத்து
பாங்குயர் பண்பினர் அனந்தர்கள் வாழிய
பூங்கமழ் தாரணி பொன்னரங் கையர்
தூங்கா ஆண்மைத் துலங்குத வத்தினர்
வையம் கண்டிரா வானிதி கொணர்ந்து
மெய்ந்நிலைப் போதம் விழைந்தவர்க் கருளி
இந்நாட் டினிலே எமபயம் கடத்தி
அந்நாட் டினுக்கு ஆம்வித் தெடுத்து
புதுயுகம் புரக்க எழுந்தார்!
இதமறிந் தேன்றவர் என்றும் நிலைத்தார்! (12)

நேரிசை வெண்பா

நிலையான மெய்வாழ்வில் நித்தியர்நின் றுய்வார்
கலையாவி னும்சிறந்த சாகாக் - கலைகற்றுத்
தேர்ந்தார்கள் சற்குணமே சார்ந்தார்கள் மெய்ப்பதமே
ஆர்ந்தார் அனந்தாதி யர். (13)

நேரிசை ஆசிரியப்பா

ஆதி தேவன் அம்புவி போந்தார்
நீதி மெய்ம்மை நிலைவரம் ஈந்தார்
சாதி மதங்கள் சமரசம் ஆக்கி
வேத மறைகள் மெய்ம்மை துலக்கி
சீதன மேழின் சீர்மை விளங்க
போதம் அருளினர் பொன்னரங் கரசர்
வேதவே தாந்தம் மான்மியம் வாக்கியம்
நீதர் அனந்தர் பெற்றநற் பாக்கியம்
மூதுரை உகந்தோர் மீண்டனர்
தீதறு வானகச் செல்வம் ஆண்டனர். (14)

நேரிசை வெண்பா

ஆண்டவர்கள் பொற்றாள் அகலா துறைந்தவர்
வேண்டுவரம் பெற்றார் வினைதீர்ந்தார் - தூண்டா
மணிவிளக்காய் ஓங்கி மறலியிருள் நீங்கி
அணிவிளக்காய் ஆனார் அறி. (15)

நேரிசை ஆசிரியப்பா

அறிவுக் கறிவாய் அமுதுகு தருவாய்
நெறிநின் றார்க்கு நின்மல குருவாய்
பொறிவாய் ஐந்தவி போதகம் அருள்வாய்
குறிகுணம் கடந்த கோதகல் திருவாய்
வறியவன் பெற்றுய் வாரிதிக் குவையாய்
செறிதரு பிரம்மம் சிவன்மால் உருவாய்
தெய்வம்வந் தார்கள் உய்யச்செய் தார்கள்
மெய்வழி காட்டி உய்வழி கூட்டி
வையமும் வானமும் ஈடிலா
மெய்ப்பொருள் ஈந்தார் வானக வள்ளலே! (16)

நேரிசை வெண்பா

வள்ளல்வான் செல்வம் வழங்குகொடை மாதனத்தார்
உள்ளம் கவர்கள்வர் ஒப்பிலியர் - தெள்ளியசீர்
மெய்வழியை மேதினியில் தான்கொணர்ந்த மேதகுசீர்
உய்வழியர் என்றே உணர். (17)

நேரிசை ஆசிரியப்பா

உணர்வில் முகிழ்த்து உள்ளம் கிளைத்து
பணர்வீ சிப்படர் பாண்டியர் மெய்ம்மை
வளர்ந்தினி தோங்க வள்ளல் சாலையர்
தளர்வறி யாத தவமிகு ஆண்மையர்
சன்னிதி சார்ந்து செங்கரம் ஏந்தி
மன்னிய சீர்பெற கண்ணினீர் சொரிந்து
பாடிப் பராவிப் பணிந்து வணங்கி
நாடிநின் றாக்கால் நற்றவர் இரங்கி
வாழும் பயிர்க்கு மழையெனத்
தேடிவந் தருளுவார் ஜீவன் வளருமே! (18)

நேரிசை வெண்பா

வளரும் உயிர்ப்பயிர்தான் வானாட்டு வித்தாய்
தளர்வறியாத் தானவர்மெய் யன்பால் - உளம்இரங்கி
அங்கத்தி லேற்று அரவணைப்பார் ஆதரிப்பார்
தங்கமாய்த் தானாக்கும் தான். (19)

நேரிசை ஆசிரியப்பா

தானவர் எனவே தன்னெறி செல்வார்
வானவர் தெய்வம் வழங்கும் மெய்ச்சீர்
கானவர் ஆகிக் கொடுங்குணம் அழிக்கும்
தேனவர் எனவே திருவருள் தேக்கும்
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும்
ஆனகம் புக்கு அருண்மழை பொழியும்
அறம்வளர் அண்ணல் மறலியை வென்று
என்னையும் ஏன்றுய் வித்தனர்
தன்னையும் தந்தவர் தாள்மலர் போற்றி! (20)

அருள் இருபா இருபஃது இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!