பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 87


4. கைமாய்' என்பதற்குக் கழைமாய் என்ற பாடங் கொண்டால், ஒடக்கோலும் நிலைகொள்ளாது மறையும் பெருவெள்ளம் என்க.

விளக்கம்: 'பிரியும் மடமையோர் அளியர்' என்றதால், பிரிவுக்குத் தூண்டி தன் நெஞ்சைத் தடுத்தமையும்; பிடிகளிற்றோடு நீராடும் என்றதால், தானும் இன்ப விளையாட்டிலே திளைக்க விரும்பியமையையும் காணலாம்.

44. வினை முடித்தனன் வேந்தனும்!

பாடியவர்: குடவாயில் கீரத்தனார்; உறையூர்ச் சல்லியங் குமரனார் பாடியது என்ற பாடபேதமும் உரைக்கப்படும். திணை: முல்லை. துறை: வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. சிறப்பு: பழையன், நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்துறை, கணையன், பெரும்பூட் சென்னி ஆகியோரும்; கழுமலம், அழும்பில், குடவாயில் ஆகிய ஊர்களும் கூறப்பெற்றன. கழுமலப் போரிலே வெற்றிபெற்ற சோழனின் பெருமையும் உரைக்கப்பட்டது.

(போரிலே ஈடுபட்டுச் சென்ற தலைவன் ஒருவன், போர் முடிந்ததும், தன் காதலியின் நினைவு மேலெழத் தன் பாகனைத் தேரை விரைந்து செலுத்தத் தூண்டுகிறான்.)

வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம்திறை கொடுத்துத் தமர்ஆ யினரே,
முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
ஒன்றுஎன அறைந்தன பனையே, நின்தேர்
முன்இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது 5

ஊர்க, பாக! ஒருவினை, கழிய -
நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி,
துன்அருங் கடுந்திறற் கங்கன், கட்டி,
பொன்அணி வல்வில் புன்றுறை என்றுஆங்கு
அன்று.அவர் குரீஇய அளப்புஅருங் கட்டுர், 10

பருந்துபடப் பண்ணிப், பழையன் பட்டெனக்,
கண்டது நோனா னாகித் திண்தேர்க்
கணையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர், 15

பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை,
தண்குட வாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன்துயில் பெறவே!