பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

அகநானூறு -களிற்றியானை நிரை


உள்ளங்கைகளை வெதுப்பியவனாகக் கிடைகாத்திருப்பான். அவன், மிக்க இருளிலே ஆடுகளைக் கவரவரும் குரு நரிகளை அலைத்தோட்டும் நீண்ட ஒலியானது,

சிறு கண்களையுடைய பன்றிகளின் பெருங்கூட்டத்தை ஒட்டுவதற்கு, முற்றிய தினைப்புனங்களைக் காத்திருப்போர், அவை வருங்காலத்தை எண்ணியிருந்து ஊதும் பெரிய கொம்புகளின் ஒலியேர்டு, ஒருங்கே வந்து இசைக்கும், வன்புலமாகிய காட்டுநாட்டது அவளுடைய ஊர். ('பாக! விரைந்து தேரைச் செலுத்துவாயாக!' எனப் பாகற்கும், 'பாங்கனே சென்று தூது உரைத்து வருவாயாக’ எனப் பாங்கற்கும்.இயைபுபடுத்துக)

சொற்பொருள்: தேம் - தேன். சிமயம் - மலையுச்சி. பம்பிய - செறிந்த 2 குவையில்ை-குவிந்த இலை.4 மறித்துருஉத் தொகுத்த - மறிகளைக் குடில்களிலே தொகுக்கும். பறி - பாய். 7. ஐதுபடுகொள்ளி, சுழன்று எரியும் நெருப்பு. 15 இரும்பல் கூந்தல் பலவன்க்யர்க் ஒப்பனை செய்யப்படும் கூந்தல்

விளக்கம்: 'இச்செய்யுள் இருத்தல் நிமித்தமாம், இக் காலம் வருந்துணையும்ஆற்றினாள், எனத் தான் வருந்துதலின் என்பார், நச்சினார்க்கினியர்,

களவிற் பிரிவாதலால் இரவுக்குறியிலே தான் செல்லுதல் அலர் எழக் காரணமாகும் எனற்பொருட்டு, நரி ஒட்டும் இடையனையும், பன்றி கடியும் கானவனையும் கூறினன், பாங்கன் "துணையை நாடினன் என்க. பாகற்கு உரைத்ததாகக் கொள்ளின், அப்போதும், உறங்காது விழித்திருப்பவள் அவள் எனத் தொட்ர்புபடுத்துக்'

95. பையபயப் பசந்தன்று!

பாடியவர்: ஒரோடோகத்துக் கந்தரத்தனார். திணை: பாலை துறை: போக்குடன்பட்ட தலைமகள், தோழிக்குச் சொல்லியது. '

(களவினால் ஊரலர் எழுந்தது. அன்னையோ, தெய்வத்தால் வந்தது எனத் தெய்வம் பராவி, இற்செறிப்பும் செய்தனள் கூட்டம் அருமையாகவே அவள் மெலிந்தாள். அதனைக் கூறித், தான் உடன்போக்கிற்குத் துணிந்தமையைத் தோழிக்குச் சொல்லு கிறாள். த்லைவி)

          பையப்பயப் பசந்தன்று துதலும்,
          சாஅய், ஐதுஆகின்று,என் தளிர்புரை மேனியும்,
          பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்;