பக்கம்:அஞ்சலி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 129

“ராவெல்லாம் தாக்கம் முழிச்சு கண்ணு திகுதிகுன்னு நெருப்பு கக்குது. ஒடம்பு பூட்டுக்குப் பூட்டு விட்டுப் போவுது. இன்னும் வேலை தலைக்குமேலே கிடக்குது.

“புளுக்கின நெல்லைக் களத்து மேட்டுமேலே காயப்போட வண்டியைக் கட்டிக்கிட்டு ஆளு வந்திடுவான். சோறாக்கியாவணும். பெரிய பையனுக்கு மாரியாத்தா வந்து இறங்கியிருந்தாள். மத்தியானம் அண்டா நிறைய கூழு காச்சி, ஏழைங்களுக்கு ஊத்தியாவணும். நம்ம பின் தங்கிட்டோமுன்னு அதை ஒடிப்போய்ப் புடிக்கிற வரைக்கும் எந்தக் காரியம் நமக்காகக் காத்துட்டு நிக்குது?”

“எல்லாத்துக்கும் ஒடற தண்ணிலே அமுந்து குளிச்சாதான் உடம்பு ஒரு நிதானத்துக்கு வரும்னு காவாய்க்குக் கிளம்பினேன்.

“தண்ணிலே இறங்கினேன். வானத்துலே கிஷ்டான்னு கருடன் கத்திச்சு. கன்னத்துல போட்டுக்கிட்டே மொவம் நிமிந்தா,கரைமேட்டுப் பின்னாலே கையைக் கட்டிக்கிட்டு, அந்த ஆளு என்னை முறைச்சபடி நின்னுட்டிருந்தான். அவனுக்குக் கண் இமைகூடக் கொட்டல்லே. ராவெல்லாம் இவன் எங்கேயிருந்தான்? என் மாதிரியே தூக்கம் முளிச்சுக்கிட்டாயிருந்தான்?”

“எனக்கு ஆத்திரத்துலே தைரியம்கூட வந்துட்டுது. ‘பொம்புள்ளங்க குளிக்கற எடத்துலே ஆம்புள்ளேங்களுக்கு என்ன வேலை? அவங்களுக்குத் துறை தனியாயிருந்தாலும் இங்கேதான் கண்ணா என்ன’ன்னு பொதுவுலே கத்தினேன்.”

“அவனுக்கு மெதுவா தலையிறங்கிட்டுது. கண்ணுலேயிருந்து ரெண்டு சொட்டு கன்னத்துலே வழிஞ்சு இறங்கிக் கீழே விழுந்தது. அதைப் பார்த்ததும் எனக்குத்

அ.—9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/139&oldid=1025682" இலிருந்து மீள்விக்கப்பட்டது