பக்கம்:அஞ்சலி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136 லா. ச. ராமாமிருதம்

மீளாத வேலை. கொழந்தையும் குட்டியும் சம்சாரமும் பெருத்துட்டா, எப்போப் படுக்கறோம். எப்போ நிக்கறோம், என்ன செய்யறோம், அது, இது, எது எல்லாமே கொழம்பி ஒரே சுத்துத்தான் பம்பரமாட்டம்.

ஆனால் சில சமயம் நினைப்பேன்: அன்னிக்கு நான் கீழே நாலு கால் உயிராட்டம் விழுந்து கையையும் காலையும் மண்ணுலே புதைச்சுட்டு, பூமியைக் கெட்டியா கவ்வாமே இருந்தா என்பாடு என்னவாயிருக்கும்? இப்பொத்தான் தெரியுது, இந்த மண்ணும் நம்மை உயிரோடுதான் தாங்குது. குளிருக்குக் கொழந்தையை அணைக்கறாப்பிலே, சமயத்துலே கெட்டியாப் புடிச்சுக்குது.

அன்னிக்கு ஒருநாள் வாளி நிறையா தண்ணி யேந்தி வரப்போ கல்லு தடுக்கிக் கால்லே போட்டுக்கிட்டேன். கட்டை விரல்லேருந்து இரத்தம் பீச்சியடிக்குது. அதைத் தரை மண்னு ஜிவ்வுன்னு உறிஞ்சிக் குடிக்குது. அதைப் பார்த்துட்டு என் வலிசகூட மறத்து நின்னேன். ஆமா, இதுக்குக் கண்டிப்பாய் உயிரிருக்குது. என் ரத்தம் உயிர்தானே! அதை எப்படி இது குடிக்குது பாரு இப்படித் தான் அதுக்கு உயிர் இருக்குது...

“ஆனா இந்த யோசனையெல்லாம் எனக்கென்னாத்துக்கு......”

பூரணி விழித்துக்கொண்டாள். ஜன்னலுக்கு வெளியே இருள் கவிந்துகொண்டிருந்நது.

“ஏன், ஒத்தரும் ஞானமணி சாமி கோவிலுக்குப் போய் விளக்கு வெக்கல்லே...?”

பழக்கங் காரணமாகவே அக்கேள்வி அவளிடமிருந்து வெளிப்பட்டது.

“வேலையைக் கவனிங்க! துரை நீ பாே...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/146&oldid=1033461" இலிருந்து மீள்விக்கப்பட்டது