பக்கம்:அஞ்சலி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162 லா. ச. ராமாமிருதம்

“இல்லே, இப்போ பேத்தல்லே. காலையிலே பேத்தல் வந்துTடும். எனக்கே தெரியும். நான் பேச வேண்டியதைப் பேசித் தீர்த்துக்கறவரைக்கும் ஜன்னியை எட்டப் பிடிச்சு வெச்சிருக்கேன்—”

“பாகி, இதெல்லாம் என்ன?”

“நீங்கள் என்னை நம்பப்போறேளா இல்லையா?”

“எதற்கு?”

“நான் உங்களுக்குத் துரோகம் பண்ணல்லே. முகத்தைச் சுளிக்காதேங்கோ. உங்கள் முகம் எப்படிப் போறதுன்னு இருட்டிலேகூடத் தெரியும். நான் உங்களுக்குத் துரோகம் பண்ணல்லே.”

“ஆரம்பிச்சாச்சா? மறுபடியும்—”

“மறுபடியில்லை இனி மறுபடியே இல்லை. இந்த ஒரு தடவையுடன் ஒரே தடவைதான். அத்துடன் நானே சரி. விடியாத ஒரே இரவாய், இந்த இருவத்திமூணு வருஷங்களின் ஒவ்வொரு நாளின் இருப்பே போறும். எனக்கு நாளைக்கு விடிஞ்சுடும்.”

“இந்த இருபத்தி மூணு வருஷங்களாய் நான் உன்னை ஏதாவது கேட்டிருக்கிறேனா?”

“நீங்கள் கேக்காமல் இருந்துதானே அந்த இரவை, இந்த இருபத்திமூணு வருஷங்களாய் நீட்டி நீடிச்சு வேச்சிருக்கேள்! அந்தப் பெருமை உங்களுடையதுதான். ஆனால், அந்த நேஞ்சுக்கனம் எனக்கு வருமா? நான் உருகி உருகி உள்ளுக்கே உளுத்துப்போயாச்சு. ஏன்? ஏனென்று என்னை ஒரு வார்த்தை நீங்கள் கேட்காததால், நீங்கள் கேட்காமல் நான் என்னத்தை உங்களை நம்பச் செய்ய முடியும்?—”

அப்பா ஏதோ சொன்னார். ஆனால், அவர் சொன்னது காதில் விழவில்லை. ஓர் இலையின் அசைவில் அது கலந்துவிட்டது. அப்பா சாதாரணமாய்ப் பேசினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/172&oldid=1025905" இலிருந்து மீள்விக்கப்பட்டது