பக்கம்:அஞ்சலி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 231

“ஏகா, நீ வந்து வருஷம் எட்டாச்சு. நீ படி மிதிச்ச வேளைக்குக் குத்தமில்லாதபடி, இதுவரை ஆகிற செலவு எப்படியெப்படியோ இருந்தாலும் அரிசிப் பானையிலிருந்து அள்ளி எடுக்கும்படித்தான் இருக்கு. சுரண்டல்லே: அப்படியிப்படி நீயும் அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை. உன் உடம்போடு பிறந்து, பேச்சில் ஒரு படபடப்புத் தவிர, நெஞ்சில் தோணினதையெல்லாம் கொட்டறதில்லை. பூட்டிவைக்க வேண்டியதுமிருக்குன்னு தெரியாமல் இருக்கையே. அதுதவிர, இதைப் பெரிசு பண்ணிக்கறவா பண்ணிப்பா; ஆனால் நான் பண்ணிக்கல்லே. பண்ணிண்டு என்ன பண்றது?, கோவிச்சுண்டு போறத்துக்கு இன்னொரு பிள்ளையிருக்கானா? குடும்ப சக்திக்கு மீறி, தர்ம சிந்தனையும் நெஞ்சிளக்கமும் உனக்கு இருக்கு, நான் கவளத்தை வாயில் போட்டுக்கு முன்னாலேயே, பிச்சைக்காரனுக்குப் படியளந்தாயிடறது. ஆசாரத்துக்கும் உனக்கும் துருவ துாரம். ஒருவேளை சோறு. அதை ஜாதி மாறாமல் சாப்பிட எவ்வளவோ பிரயத்னம் செய்யறேன். ஆனால் அந்த சாதத்தை வடிச்சு இறக்கறத்துக்குள் ஒரு தரமாவது பக்கத்து வீட்டு நாயுடுக் குழந்தையைக் கையில் வாங்கிக் கொஞ்சாவிட்டால் உனக்கு மண்டை வெடிச்சுடறது. இத்தனையும் போகட்டும், நான் கேள்வியாத் தான் கேட்கிறேன். குத்தமாக் கூறல்லே—ஆமா, உன் வயிறு ஏன் இப்படிக் கல்லாயிருக்கு?”

கல்லா? ஏகா தன் அடி வயிறைத் தடவிப் பார்த்துக் கொண்டாள் இலையிலே எழுதின தளிவடாம் மாதிரி முதுகோடு ஒட்டின்னா கிடக்கு மாடுதீனி தின்கிறேன், எனக்கே தெரியறது. ஆனால் என் பாம்புக் குடலுக்கு என்ன பண்ணுவேன்?

“எனக்கு ஏதும் வேண்டாம். காலமிருக்கிற இருப்புக்கு, என் ஒற்றைப்பிள்ளை கைக் கொள்ளியை வாங்கிண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/241&oldid=1026661" இலிருந்து மீள்விக்கப்பட்டது