பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

பூரிப்பும் பெருமையும் அடைதல்

பூரிப்பும் பெருமையும் புளகாங்கிதமும் அடைதல்

பூரிப்பும் மலர்ச்சியும் பொங்கிய உள்ளம்

பூவும் பொட்டும் பொலிய அலங்கரித்தல்

பூவுயிர்த்தன்ன புகழ்சால் எழிலுண்கண் (கலித் 142)

பூவுறங்கினும் புள்ளுறங்காத ஒரு பொய்கை

பெட்டிப் பாம்பு போல் ஒட்டி அடங்குதல்

பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு செல்லல்

பெட்டி பேழைகளுடன் புறப்படுதல்

பெண்டாட்டி பிள்ளைகளைப் பேணுதல்

பெண்டு பிள்ளைகளைப் பேணிக் காத்தல்

பெண்ணோடு ஆணோடு பிறக்காத பெரும்பாவி (பழ)

பெயரும் பீடும் எழுதிய நடுகல்

பெருங்கை யிருகளிறு (ஐந்திணை எழுபது 12)

பெருகி உவட்டெடுத்த பேரின்ப வெள்ளம் (வருண

குலாதித்தன் மடல்)

பெருந்துயர் கொண்டு வருந்துதல்

பெருமையும் பெருமிதமும் அடைதல்

பெருமதிப்பும் பேரன்பும் கொண்ட

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

பெற்றது பிறந்தது பிற்காலத்தில் உதவும்

பெற்ற வயிறு பற்றி எரிய

பெற்று வளர்த்த பெற்றோர்களைப் பேணுதல்

பெறற்கருந் தொல்சீர்த் துறக்கம் (பட்டினப் 104)

பெறுதற்கரிய பெரும் பேறு

பெறுதற்கரிய பேறு பெறுதல்

பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாதல்

பேச்சு மூச்சற்றுக் கிடத்தல்