பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அணியறுபது


திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும் உருத்த மனத்தோடு உயர்வுள்ளின் அல்லால் அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று எருத்திறைஞ்சி நில்லாதாம் மேல்.

(நாலடி,304)

சிறந்த மேலோருடைய சீர்மையை இது வரைந்து காட்டியுள்ளது. வறுமையுறினும் சிறுமை அடையநேரார்; யாண்டும் மானமும் மதிப்பும் பேணியே வாழ்வார். பான்மை படிந்துவர மேன்மை விளையும்.

ஞானமும், மானமும், பணிவுடைமையும், பண்பும் மக்களுக்கு அணிகலன்களாய் அழகு செய்து வருகின்றன. அந்தப் பான்மைகள் தோய்ந்து மேன்மைகளை யடைந்து எவ்வழியும் செவ்வியராய் வாழ்க.


16. கேட்கும் செவிக்கனிகோள் கேளாமை;
கேழ்கிளரும்
தோட்குச் சிறந்த அணி தோலாமை;-தாட்கணி :தாவென் றோருவனிடம் சாராமை; தன்வாய்க்கு
நாவென்றி யேயணியாம் நன்கு.

(கசு)

இ-ள்.

ஒருவனுடைய செவிகளுக்கு அழகு கோள் உரைகளைக் கேளாமை, தோள்களுக்கு அழகு தோல்வி நேராமை: தாள்களுக்கு அழகு தா என்று எவரிடமும் சாராமை; வாய்க்கு அழகு யாண்டும் வழுவாமல் என்றும் வெல்ல வுரிய நல்ல சொல்லே என்க.

கோள் என்பது பிறரைக் குறித்துப் பிழையாகப் பழித்துச் சொல்வது. கொளுவிக் கொள்ளும்படி