கதிரியக்கம்
135
முடிவதில்லை. உட்கரு என்ற சிறிய இடத்தில் நேர் இயல் மின்னிகளின் எண்ணிக்கை கட்டுக் கடங்காதபடி அதிகமாகி விடுகின்றது. ஆதலால், அவை பொது இயல் மின்னிகளுடன் சேர்ந்து சிறுசிறு கழகங்களே அமைத்துக் கொள்ளுகின்றன. இரண்டு நேர் இயல் மின்னிகளும் இரண்டு பொது இயல் மின்னிகளும் சேர்ந்து ஒரு கழகமாக அமைகின்றன. இந்த மாதிரி இணைந்த சேர்க்கை தான் ஆல்பா-துணுக்கு (அஃதாவது பரிதியத்தின் உட்கரு) என்பதை நாம் அறிவொம். இந்தச் சிறு கழகங்கள் மிகவும் ஒற்றுமையுடையவை என்பது பரிதியக் கட்டின் அமைப்பை அறிந்தி நமக்கு நன்றாகத் தெரியும்.
இந்தக் கழகங்களைச் சுற்றிப் பலவகையான குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போதிலும் அவை அவற்றால் பாதிக்கப் பெறுவதில்லை. அவை கைகோத்துக்கொண்டு தம் நிலையைவிட்டு ஒற்றுமையாகவே வாழ்கின்றன. கதிரியக்கக் கிளர்ச்சியுள்ள உட்கருக்களினுள் எவ்வகையான குழப்பங்கள் நிகழ்கின்றன என்பதை மேலே கண்டோம் அல்லவா? சில சமயம் நியூகிளியான்களின் பொருள் திணிவு ஆற்றலாக மாற்றப்படுகின்றது. ஒரு நுண்ணிய எதிர் மின்னியின் பொருள்-திணிவுகூட பேரளவு ஆற்றலை இயற்றக்கூடும் என்பதை நாம் அறிவோம். இந்த ஆற்றல் விடுவிக்கப் பெற்றதும் அந்த அணு வெடிக்கின்றது. ஆனால், அத்தகைய விபத்து நிலையிலும் நேர் இயல் மின்னிகளும் பொது இயல் மின்னிகளும் ஒன்றையொன்று விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அவை ஆல்பா - துணுக்குகளாகவே வீசியெறியப் பெறுகின்றன. அணுவில் பிறந்த ஆற்றலும் ஆல்பா-துணுக்கைத் தகர்த்தெறியும் வன்மை பொருந்தியதாக இல்லை. அதை வெளியே அகற்றுவதற்கு மட்டுமே போதிய ஆற்றலை அது பெற்றிருக்கின்றது.
வேறு துணுக்குகள் : உட்கருவில் நேர் இயல் மின்னிகளும் பொது இயல் மின்னிகளும் மட்டுமே இருக்கின்றன என்று நாம் அறிவோம். ஆனால், அணுக்கள் வெடிக்கும் பொழுது உட்கருவிலிருந்து சிற்சில சமயம் எதிர் மின்னிகளும்