பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

அணுவின் ஆக்கம்


துப்பறியும் கருவிகள்

எல்லா அணுக்கரு மாற்றங்களும் (நேராகவோ நேரல் முகமாகவோ) விரைவாக நகர்ந்து செல்லும் மின்னூட்டம் பெற்ற துணுக்குகளால் நடைபெறுகின்றன. காற்றின் மூலமாகவோ அல்லது வாயுவின் மூலமாகவோ இவை செல்லுங்கால் வழியிலுள்ள அணுத்திரளைகளுடன் மோதுகின்றன; இவ்வாறு மோதுங்கால் அடிக்கடி அவற்றிலுள்ள எதிர் மின்னிகளை விடுவிக்கின்றன; இந்த எதிர் மின்னிகள் அண்மையிலுள்ள அணுத்திரளைகளில் இணைந்து கொள்ளுகின்றன. எனவே, இத்துணுக்குகள் உண்டாக்கிச் சென்ற அடிச்சுவடுகளிலுள்ள சில அணுத் திரளைகள் எதிர் மின்னிகளை இழந்து நேர் மின்னூட்டம் பெறுகின்றன; சில அணுத்திரளைகள் எதிர் மின்னிகளை ஏற்று எதிர் மின்னூட்டத்தை அடைகின்றன. இவ்வாறு மின்னூட்டம் பெற்ற அணுத்திரளைகள் (அல்லது அணுக்கள்) அயனிகள்3 என்று வழங்கப்பெறும்; இக்கிரியை அயனியாக்கல் என்று பெயர் பெறுகின்றது. இவ்வாறு விரைவாகச் செல்லும் மின்னூட்டம் பெற்ற துணுக்குகளால் வாயுக்கள் அயனியாதலை அடிப்படையாகக் கொண்டே நடைமுறையிலுள்ள எல்லா முறைகளும் எல்லா அணுக்கரு மாற்றங்களையும் உற்று நோக்கி அறிவதற்கு மேற்கொள்ளப் பெறுகின்றன.

மேக அறை4 : இது அதனைக் கண்டறிந்த அறிஞர் பெயரைச் சேர்த்து வில்சன் மேக அறை என்றும் வழங்கப் பெறுகின்றது. இதனை 1912-ல் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் டி. ஆர். வில்சன்5 என்பார் கண்டறிந்தார். ஸ்காட்லாந்து மப்புச் சூழ்ந்த ஒரு நாடு. வில்சன் இளமையிலிருந்தே இயற்கை அழகினில் ஈடுபட்டுக் களிக்கின்றவர். ஒரு நாள் இவர் மாலை வெய்யிலின் மஞ்சட் கதிர்கள் பணியை முத்தமிடும் வேளையில் உலாவச் சென்றார். வானத்-


3அயனிகள்-ions. 4 மேக அறை-cloud chamber. 5டி. ஆர். வில்சன்-Charles T. R. Wilson.