பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அணுவின் ஆக்கம்

எந்தச் சடப்பொருள் துணுக்குகளிலும் உறவு கொள்ளவில்லை. ஆயினும், அது ஒளியணுக்கள்" எனப்படும் ஈதரின் துணுக்குகளானது." இந்த ஒளியணுக்கள் நேராக நம் கண்ணினுள் நுழைந்து பார்வை புணர்வைத் தூண்டி விடுகின்றன.

ஆற்றல்களின் மூலம்: கதிரவன்தான் ஆற்றல்களின் பிறப்பிடம் மூலம், ஏராளமான ஒளி ஆற்றல், அல்லது கதிர்வீச்சு ஆற்றல், கதிரவனிடம் உற்பத்தியாகி விசும்பு வெளியைக் கடந்து வினாடிக்கு 1,88,000 மைல் வீதம் விரைந்து வந்து பூமியை அடைகின்றது. அது நம்மை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. பூமி வெப்பம் இழந்து சில்லிட்டுக் குளிர்ந்து உயிரற்றுப் போகாதபடி சூரியனால் காக்கப்பெறுகின்றது. கதிரவனுடைய உட்புறத்திலுள்ள வெப்பம் சுமார் 20,000,000 சுழியுள்ளது. அங்குள்ள அமுக்கமும் ஒரு சதுர அங்குலத்திற்கு 15,000,000,000 இராத்தல்களாக இருக்கின்றது. இவ்வளவு வெப்பமும் அமுக்கமும் சூரியனிடம் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதால் சூரியனிடமிருக்கும் கோள்நிலை எதிர் மின்னிகள் முற்றிலும் உதிர்க்கப்பெறுகின்றன. ஆயின், அவற்றின் உட்கருக்கள் மட்டிலும் தகர்ந்து போகாமலிருக்கின்றன. அந்த நிலையில் நேர் இயல் மின்னிகளும் பொது இயல் மின்னிகளும் சிக்கலான முறைகளில் இணைகின்றன. அவை இணையும்பொழுது ஆற்றல் வெளிப்படுகின்றது. சூரியனிடமிருந்தும் நட்சத்திரங்களின்சின்றும் ஆற்றல் வெளி வருவதற்கு இந்நிலைகளும் நிகழ்ச்சிகளுமே காரணம் ஆகும். கதிரவனிடம் இரண்டு நேர் இயல் மின்னிகளும் இரண்டு பொது இயல் மின்னிகளும் இணைந்து பரிதிய உட்கருவை" இயற்றுகின்றன. இதனால் அதிகமான அளவு சூடு விடு விக்கப் பெறுகின்றது. ஒவ்வொரு நொடியிலும் கோடான கோடி உட்கருக்களில் இந்நிகழ்ச்சி நிகழ்ந்து வருகின்றது.


  • ஒளி அணுக்கள்- photons. * ஈதரின் துணுக்குகள் . etherial particles. ** பரிதிய உட்கரு- heilum nucleus