பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 36



‘கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பாராமல்-மேலே மேலே முன்னேற்றப்பாதையை நோக்கி, வேகமாக அடி எடுத்துச் செல்’ - என்று தனக்குத் தந்தை அறிவுறுத்துவது போலவே தோன்றும்.

காலம் என்னும் அற்புத மருத்துவன் அவர் மனத்துயரை மெல்ல மெல்ல ஆற்றி வந்த போது -

அண்ணாமலைச் செட்டியார் மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரையுமே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்த நாள் ஒன்று வந்தது.

ஆம்!

5.8.1905-ம் ஆண்டு அண்ணாமலைச் செட்டியாருக்கு அழகே உருவானதொரு ஆண் குழந்தை பிறந்த செய்திதான் அது!

அயோத்தியில் ராமன் பிறந்தது போல்-

அண்ணாமலைச் செட்டியாருக்கு ஆண்மகவு பிறந்த செய்தி கேட்டு ஊரே குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது.

அண்ணாமலைச் செட்டியார் எண்ணற்ற தான தருமங்கள் செய்தார். தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கெல்லாம், பரிசும், பணமும் வாரி வழங்கினார்.

நல்லதொரு நாளில், குழந்தைக்கு, “முத்தையாச் செட்டியார்” என்னும் பெயர் சூட்டும் விழாவை ஊரே வியக்கும் வண்ணம் விமரிசையாகக் கொண்டாடினார்.

முத்தையாச் செட்டியார் பிறக்கும் போதே கருவில் திருவுடையராய்ப் பிறந்தார்.