பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63 அற்புத மனிதர்



எந்தப் பொருளைக் குறித்த விவாதமானாலும் அறிவு விளக்கத்திற்கான முறையில், ஒளிகூட்டிப் பேசும் இயல்புடையவர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார்.

அவருடைய மணிவிழாவிற்குப் பின்னர், பல்கலைக் கழகத்தில் இசைத் தமிழ் வளர்ச்சியே, பெரிதும் அவர் நெஞ்சைக் கசியச் செய்தது.

தன்னுடைய இல்வாழ்க்கையில் அவர் நற்பேறு பெற்றவராக, விளங்கினார். அவரது வாழ்க்கைத் துணைவி ராணி சீதை ஆச்சியார், கடவுள் பக்திக்கும்- தாராள மனப்பான்மைக்கும் பெயர் பெற்றவராய்த் திகழ்ந்தார்.

அவர்களுக்கு வாரிசுகளாக வாய்த்த மக்கட் செல்வங்கள் மூன்று ஆண்களும், நான்கு பெண்களுமாவர்.

மூத்த மைந்தராகிய ராஜா சர். முத்தையா செட்டியார், தன் தந்தையாருக்குப் பின் அவரது சிறப்புக்களையும், குடும்ப பெருமைகளையும் காத்து வருகின்ற, வாரிசாகத் திகழ்கின்றார்.

1932-ம் ஆண்டு மேயர் பதவி நிறுவப் பெற்ற பொழுது, சென்னை மாநகராட்சியின் முதல் மேயராகப் பொறுப்பேற்றவர் இவரே.

மேலும், கல்வி, பொதுநலம் ஆகிய துறைகளில் அமைச்சராகவும் - சென்னை பல்கலைக் கழகத்தின் இணை வேந்தராகவும் பணியாற்றினார்.