பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அண்ணாவின் ஆறு கதைகள்


“நீர் யார்? என்று கேட்டாள் ராஜகுமாரி, நானா? நான் ஓர் பாக்யசாலி !” என்றான் அரசகுமாரன். “ஊர்?” என்று கேட்டாள் அவள். பிறந்த இடம் வீணாபுரி, இப்போது இருக்குமிடம் "இன்பபுரி” என்றான் அவன். "கவியோ?" என்று அரசகுமாரி கேட்டாள். அவனுடைய பேச்சின் நடையழகைப் புகழ்ந்து. “கால்கள் இரண்டே காணாய்” என்று அவன் தன் புலமையையும் நகைச்சுவையையும் காட்டும் முறையிலே பதில் கூறினான்.”

“எனக்கு விளங்கவில்லையே !”

“கவி, என்றால் குரங்கு என்றும் ஒரு அர்த்தம் உண்டு அவள் அவனை நீர் கவியா என்று கேட்டதும் அவன் எனக்கு இரண்டே கால்கள், நான் குரங்கல்ல என்று கூறினான்.”

“அந்தக் கோணல் பேச்சுப் பேசுவானேன் அவன். ஆளுக்கு குரங்கு புத்தி போலிருக்கிறது.”

“புத்தி சரியாகத்தானடி இருந்தது. பேச்சு குளறுமல்லவா, சம்பந்தா சம்பந்தமின்றித் தானே இந்த ஆண்கள் திடீரென ஒரு பெண்ணைக் கண்டால் பேசுவது,வழக்கம்”

“உண்மையான பேச்சு! பார்வை, பேச்சு, எது சரியாக இருக்கிறது, பெண்ணைக் காணும் ஆணுக்கு, சரி. கதையைச் சொல்லு.”

“இருவருக்கும் நெடு நேரம் பேச்சு நடந்தது, காதல் ஒப்பந்தம் ஆகி விட்டது”

“என்ன? அவனைக் கலியாணம் செய்துகொள்வது என்றா?”

“ஆமாம்! அவள் அந்தத் தீர்மானத்திற்கு வந்தான்.அவனோ, மகிழ்ந்தான். ஆனால் ஒரு யோசனை கூறினான். நமது காதல் இரகசியமாகவே இருக்கட்டும்.மூன்று முண்டங்களையும் சரியானபடி அவமானப்படுத்த வேண்டும். நான் முதலிலே, நல்ல படை திரட்டி வைத்து விடு-