பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அண்ணாவின் ஆறு கதைகள்


கண்டான். சிந்தனையையும் செவியையும் அந்தப் பக்கம் செலுத்தினான். மங்கையரின் பேச்சு நிற்கவில்லை.

“படித்துவிட்டேன் லீலா ! என்ன அற்புதமான கதை தெரியுமோ அது! இன்பத்திலே இரண்டாவது இடம் இந்தக் குரலுக்கு கிடைத்தது.”

“என்ன கதை அது, அற்புதமான கதை !!”

“அற்புதம் என்றால் அற்புதமேதான்! கதையிலே வருகிற கதாநாயகியின் பெயர் என்ன தெரியுமோ?”

“அற்புதம் என்றே பெயரா அவளுக்கு”

“இல்லை ! அதிசயம்! என்று அவள் பெயர்”

“சரி, அந்த அதிசயவல்லி கதையைச் சொல்லடியம்மா அற்புதவல்லி !”

“சொன்னால் என்ன தருவாய்!”

“உன் புருஷனை விட்டு ஒரு முத்தம் தர சொல்லுகிறேன்” -

“போடி!”

இந்த இடத்திலே வாலிபன், மிகக் கஷ்டப்பட்டே சிரிப்டை அடக்கிக் கொண்டான்.”

“சொல்லடி என்றால், ... ”

“சொல்லட்டுமா?”

“ஜோதிடக்காரனைக் கூப்பிடட்டுமா. முகூர்த்தம் பார்க்க. சொல்லடி கதையை என்றால், என்னமோ பிரமாதமான பிகுவு செய்கிறாள்”

“சொல்கிறேன். நில்லடி, கிள்ளாதே, கிரீஸ் நாட்டுக் காதல் கதை அந்தப் புத்தகம்”

“கிரீஸ் நாட்டிலே கூட அதிசயம் என்று பெயர் வைத்தார்களா?”