பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

2 பயமாக இருக்கிறதா? உனக்கு உயிர்மீது இன்னம் ஆசை இருக்கிறது. எனக்கு அந்த ஆசை இல்லை. ஆகவே அச்சமும் இல்லை. நீ சுட்டாலும் சாவேன், சுடாவிட்டால்கூடச் சாவேன். (கோப்பையைக் காட்டி) இதோ பார்! இதுவும் ஒரு ஆயுதந்தான். க: என்னது இது? சு:விஷம்! க: அய்யோ! சு: அடே, என்ன அச்சம். இன்னம் இரண்டு நிமிஷம் கழித்து வந்திருந்தால் இந்தக் கோப்பை கீழே உருண்டு கிடக்கும்? என் பிணம் இங்கே கிடக்கும், உன் வேலையும் சுலபமாகி இருக்கும். க: உனக்கு பைத்யமா? &: (தலையை அசைத்து) துளிகூடக் கிடையாது. ஆனால், ஜெமீன்தாரர் ஜெகவீரர் தாசானுதாசனாகிறேன் என்று சொல்கிறார். அவரைக் கலியாணம் செய்துகொள்ள மாட்டேனென்று பிடிவாதம் செய்கிறாயே, சுசீலா! நீ ஒரு பைத்யம்-என்று அப்பா கூறுகிறார். அவர் மட்டுமா? என் ஆருயிர்க் காதலர் அடிக்கடி சொல்வார், "என்ன கண்ணே! பைத்யம் உனக்கு! உலகமே எதிர்த்தாலும் நான் உன்னை விடமாட்டேன் " என்று. அவர் ஒரு பிரபல டாக்டர். ஆனால் வேடிக்கை என்ன தெரியுமோ? எனக்குப் பைத்யம் துளிகூடக் கிடையாது. க: என்ன தொல்லை இது! இது ஒரு மாதிரி பைத்யமோ சு: உனக்குக் காதல் தெரியுமா? க தெரியாதே. சு: கன்னம் வைப்பது, கதவை உடைப்பது, காதை அறுப்பது இதுமட்டும்தான் தெரியுமோ. என்னப்பா இது. களவாடினால் உனக்குப் பொருள் கிடைக்கும். வாழ்க்கைக்குப் பொருள் மட்டும் போதுமா? காதல் தெரியாவிட்டால் நீ என்ன செய்யப்போகிறாய் களவாடிய பொருளை எல்லாம் வைத்துக் கொண்டு? க : எனக்கு மயக்கம் வருகிறது.

30

30