பக்கம்:அண்ணா காவியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



களம்புகு காதை,
117

பத்தாண்டாய் ஆண்டவராம் தேசி யத்தார்
பதவிதனை வாய்ப்பாகப் பயன்படுத்திச்

சுத்தமாக எதிர்ப்பவரே இல்லா வண்ணம்
துடைத்தெறிந்தார் பொதுவுடைமைக் கூட்டத் தாரை!

அத்தனையும் இளைஞராக அண்ணா தம்பி,
அல்லலெலாம் கடந்துபதி னய்ந்து பேர்கள்

மொத்தசன நாயகத்தின் மொய்ம்பு காக்கும்
முழுப்பொறுப்பும் ஏற்றவராய் உள்ளே சென்றார்!




துள்ளுகின்ற மாடு, மூக்க ணாங்க யிற்றால்
துடுக்கடங்கும் பான்மைபோல், கழகத் தாரை

எள்ளிநகை யாடிநின்ற 'பெருந்த லைவர்'...
ஈடற்ற சட்டமன்ற உரைக ளாலும்

தெள்ளுசுவைத் தேனருந்தித், தமிழ கத்தார்
திராவிடத்து வருங்காலம் கா ப்போம் - என்ற

உள்ளத்தைப் பெறக்கண்டும் கலங்கிப் போக
உருப்படியாய் எதிர்க்கட்சி அமைத்தார் அண்ணா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/119&oldid=1079784" இலிருந்து மீள்விக்கப்பட்டது