பக்கம்:அண்ணா காவியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மீண்டும் இந்தித் தீ
135

தீக்குளித்துச் சின்னசாமி வழியைக் காட்டச்
சிவலிங்கம் அரங்கநாதன் தொடர்ந்து செல்லப்

பாக்கியமாய்க் கருதினர் வீ ரப்பன், முத்து
படிக்கின்ற மாணவன்சா ரங்கபாணி!

போக்கினரே தம்முயிரை நஞ்ச ருந்திப்
புகழ் தமிழைக் காக்கச்சண் முகமும், முத்தும்!

தூக்கியதுப் பாக்கிரவை துளைக்கச் செத்தான்
துடிப்புள்ள இராசேந்த்ரன் சிதம்பரத்தில்!




"அமிழ்தினுமே இனியமொழி, ஆவி போக்கி
அழிந்தாலும் ஆட்சிமொழி இந்தி என்று

தமிழ்நாட்டார் ஏற்கமாட்டோம் என்றும்! எங்கள்
சாம்பலிலும் தமிழ்மணந்து சாக வேண்டும்!

உமிழ்நீரால் குளிப்பாட்டி, ஒதுக்கித் தள்ளி,
உதாசீனம் செய்வோரை ஒருகை பார்ப்போம்!

இமிழ்கடலின் அலைபோல் ஆர்த்து வாரீர்!"
என்றெழுந்தார் மாணவர்கள் கோடி: கோடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/137&oldid=1079979" இலிருந்து மீள்விக்கப்பட்டது