பக்கம்:அண்ணா காவியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழினத் தளபதி கி. வீரமணி

இது அண்ணா அவர்களின் காவியம் மாத்திரம் அல்ல. இது தமிழகத்தின் காவியம்.

நீதிக்கட்சி இல்லாவிட்டால் தமிழனுக்கு வாழ்வு என்பதே கிடையாது.

அண்ணா அவர்கள் அய்யாவின் ஒலிபெருக்கி! அண்ணா எதையும் விட்டுக் கொடுத்து எதையும் செய்யவில்லை.

அந்த உண்மையை மிகத் தெளிவாக-மிக விளக்கமாக இந்த நூலில் கவிஞர் அவர்கள் எடுத்துச் சொல்லியிருக் கிறார்கள்.

தமிழகத்தினுடைய வரலாற்றுப் பின்னணி-தமிழகத்தின் சமுதாய எழுச்சி-சமுதாய ஏற்றம்-சமுதாயப் புரட்சி-என்பவற்றையெல்லாம் தெளிவாகக் காட்டியிருக்கிறார் கவிஞர்.

அண்ணாவின் எழுத்துக்கு அடிப்படை என்னென்ன? மூன்று அடிப்படைகள் அவை:

அவரது எழுத்திலே-தமிழ் உணர்வு இருக்கும்; இன உணர்வு இருக்கும்: பகுத்தறிவு உணர்வு இருக்கும்.

இந்த மூன்று அடிப்படை உணர்வுகளும் சேர்ந்தது தான்-முத்தமிழ் போல இணைந்ததுதான்-அண்ணாவின் எழுத்து என்பதை மிக ஆழமாக இந்த நூலிலே சொல்லி யிருக்கிறார் கவிஞர் அவர்கள்.

‘அண்ணா காவியம்' என்னும் இந்த நூலில் அன்பு உணர்வு இருக்கிறது; அமைதி உணர்வு இருக்கிறது; நன்றி உணர்வு இருக்கிறது: ஏன், எல்லா உணர்வுகளுமே இருக்கின்றன!

அண்ணா அவர்களுடன் நெருங்கிப் பழகாதவர்கள் அவரைப் பற்றிக் காவியம் எழுதினால், அதிலே சுவை யிருக்க முடியாது. அண்ணாவுடன் நெருங்கிப் பழகிய போதிலும், காவியம் எழுத முடியாதவர்கள் எழுதினாலும் அதிலேயும் சுவை இருக்க முடியாது.

இவர்களோ (கவிஞர்) இரண்டு தகுதிகளும் பெற்றவர்கள்.

எனவே, இவர்கள் செய்திருக்கிற இந்தக் காவியத்தைப் போற்றிப்-பாராட்டி-நன்றி காட்டிப்-பரப்ப வேண்டிய முயற்சியை மேற்கொள்வதும் நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/14&oldid=1078003" இலிருந்து மீள்விக்கப்பட்டது