பக்கம்:அண்ணா காவியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புனிதனைத் தேடி
171

பற்கள் துலக்கிடும் அற்ப உதவிபோல்

சிற்சில ஆணைகள் சிரமேற் கொண்டு

செய்தவன், அன்பினை எய்தியோன் உன்னை

மருத்துவ மனைதனில் இருத்திப் பார்த்திட

வருத்தமா கொண்டேன்? மனமே நொறுங்கினேன்!

துன்பங் கண்டு துவளா திருத்தலும்,

இன்பங் கண்டு கண்புதைத் திருத்தலும்

கூடாதென்றே கூறினை செம்மொழி

"ஏடா, தம்பி! எடடா பேனா!"

என்றனை; நானும் எடுத்தேன்! இதற்கோ?

சென்றனை! தனியே நின்று நான் தேம்பிப்

புலம்புவதற் கென்றே சிலம்புபோல் வாயும்

அழுவதற் கென்றே விழிகளும் படைத்தேன்.

வறண்டு போம்வரை திரண்டநீர் சிந்திப்

புரண்டழுகின்றேன், புனிதனைத் தேடியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/173&oldid=1080282" இலிருந்து மீள்விக்கப்பட்டது