பக்கம்:அண்ணா காவியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அண்ணா காவியம்


ஆயிரத்தொள் ளாயிரத்து முப்பத் தைந்தில்
அருங்கொங்கு நாட்டினிலே திருப்பூ ரின்கண்

நோயுற்ற நெசவாளர் சமுதாயத்தின்
நோய்தீர்க்கக் கூடியதோர் மாநாட் டில்தான்

பாயிரத்துச் சொற்பொழிவு நிகழ்த்தி வைத்த
பட்டதாரி அண்ணாவைப் பெரியார் கண்டார்!

சேயினையே பரிந்தழைக்கும் தாயைப் போலச்
செம்மலையே ஆட்கொண்டார்; உடன ழைத்தார்!



தன்மான இயக்கத்தின் கொள்கை யாலும்,
தரமான அரசியலில் நீதிக் கட்சிப்

பொன்னான கோட்பாட்டின் தன்மை யாலும்,
பொங்கிவரும் ஆர்வத்தால் ஈடுபட்ட

அண்ணாவை: இளைஞரேனும் பெரியோ ரெல்லாம்
அன்புடனே மாநகரின் ஆட்சித் தேர்வில்

நன்மனத்தால் நிற்கவைத்தார்! ஆனால், அந்தோ,
நாடவரைப்புரிந்துகொள்ள வில்லை; தோற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/56&oldid=1078721" இலிருந்து மீள்விக்கப்பட்டது