பக்கம்:அண்ணா காவியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எழுதுகோல் வேந்தன்


ஆரியத்தின் அடிப்படையில் அமைந்த தான
ஆதிக்கத் தைப்பழைமைக் கருத்தைச் சாடிக்,

காரியத்தில் கண்ணான புரோகி தர்கள்
கற்பனையைப், புராணத்தின் கதையை விண்டு...

சீரியநல் தமிழ்ப்பண்பை அழித்து விட்டுத்
தேவையற்ற சாதிமுறை புகுத்திப் பின்னே

கூரியநம் அறிவெல்லாங் கொன்ற செய்தி
கூறிவந்தார் அண்ணாதம் நாவி னாலே!




இதிகாச புராணங்கள் அறிவைக் கொல்லும்:
ஏமாற்றும் தன்மானம் இழக்கச் செய்யும்!

இதுகாறும் விட்டுவைத்த தீமை நீங்க
இராமாய ணம்பெரிய புராணம் போன்ற

மதிகருக்கும் நூல்களிலே தீயை இட்டு
மாய்த்திடுவோம் நச்சுநிறை இலக்கி யங்கள்!

அதிவிரைவாய்ப் பரவட்டும் செந்தீ என்ற
அண்ணாவின் முழக்கத்தை மறுத்துப் பேசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/63&oldid=1078986" இலிருந்து மீள்விக்கப்பட்டது