பக்கம்:அண்ணா காவியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அண்ணா காவியம்


அண்ணாவின் நாடகத்தைக் 'கல்கி' போன்ற
அயலாரும் பாராட்டிப் புகழ்ந்து ரைத்தார்!

அண்ணாவைப் போல்கருணா நிதியும் அன்றே
அழகாகத் தந்தனரே தூக்கு மேடை

கண்ணான கலைவளர்க்கப் போர்வாள் ஒன்றும்
கண்டனரே சிற்றரசு, இராதா வோடு!

மண்ணாண்டு வந்தவர்கள் மருள லானார்,
மகத்தான புரட்சிமலர் பூக்கக் கண்டு.



மதுரையிலே வையையாற்று மணற்ப ரப்பில்
மாநிலத்தின் கருஞ்சட்டை மாநாடொன்றை

முதன்முறையாய்க் கூட்டினோம்; கார் மேகக் கூட்டம்
மொய்த்துநகர் மீதிறங்கி வந்தாற் போல

அதுவரையில் காணாத மக்கள் வெள்ளம்
அலைபாயப் பொறாதவர்கள்--இரவுப் போதில்

மெதுவாகப் பந்தருக்குத் தீயிட் டார்கள்!
வெருண்டோட விரட்டினரே, நம்மை யெல்லாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/88&oldid=1079508" இலிருந்து மீள்விக்கப்பட்டது