பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அதிகமான் நெடுமான் அஞ்சி

முடிந்தது. ஊழ்வினையின் வலியை மாற்ற யாரால் தான் முடியும்?

அடுத்த நாளே சுருங்கை வாயிலை அடைத்துக் கனமான சுவர்களைக் கட்டிவிட்டார்கள், சேரன் படை வீரர்கள். அதிகமான் வாயில் துணியை அடைத்தது போன்றது அது என்று சொல்வதா? அல்லது அவன் வயிற்றில் அடித்தது என்று சொல்வதா? இரும்பொறையினுடைய ஆட்கள் சுருங்கை வாயிலிலா மண்ணைப் போட்டார்கள்? அதிகமான் வாயிலே அல்லவா மண்ணைப் போட்டுவிட்டார்கள் ?