பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"சரினு சொல்லுங்க; நீங்க இப்ப இருக்கிறது தமிழ் மண்ணுக்கும்!"

"சரி, பாபு!"

"ஓ. கே!"

ரஞ்சனியின் முகத்திலே ஈ ஆடவில்லை!

ரஞ்சித் இமைக்க மறந்திருப்பார், பாவம்!

ஆகாயக் கப்பல் எங்கேயோ பறந்தது.

அந்த ஸ்தலத்தில் ரதி வந்ததுதான் தாமதம்; அங்கே ஜனநாயகப் பண்புடன் விசித்திரமான பரபரப்பு அரசாளத் துவங்கியது.

மறு பத்தாவது வினாடியில்:

அவர்கள் அனைவரும் திட்டமிட்டபடி, நிகழ்ச்சி நிரல் ஒழுங்குமுறையாகவே நடந்தேறிற்று.

தொலைக்காட்சி: பலே ஜோர்!

வானொலியில், ஜானகி, டி, எம். எஸ், ஜேசுதாஸ் பாடல்கள் படு டக்கர்!

'ஹோட்டல் டாஜ் கொரமாண்டெல்': "வருக, வருக! உங்கள் வரவு நல்வரவாகுக!"

மெரினாக் கடற்கரையின் சிலம்பொலியில், நந்தினி விலாசம் குடும்பத்தினரும் ரதி-மகேஷ் ஜோடிக் காதலர்களும் கும்மாளமிட்டுச் சிரித்த சிரிப்பொலி இரண்டறக் கலந்து எதிரொலித்தது.

ஆனால், ஒன்று:

பாங்கர் ரஞ்சித் இட்டதுதான் சட்டம்! அவருடைய அன்பில் குறுக்கிட யாருக்குத்தான் தைரியம் வரும்?—

154