பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


வலுத்தவனும் அலுத்தவனும்

வலுத்தவன் (வலிமை உள்ளவன்) வசதியோ பணமோ இல்லாத வாழ்விலும், வலிமையுடன் போராடி, சுகமாக வாழ்கிறான். அலுத்தவனோ (வலுகுறைந்த உடல் உள்ளவன்) வாழ்க்கையில் வசதிகள் பல இருந்தாலும், நோய்களுக்கும் கவலைகளுக்கும் ஆளாகி, அவற்றோடு போராடியே சாகிறான். இதுதான் இயற்கையின் தர்மக் காட்சியாகப் பெருகிக் கொண்டிருக்கிறது.

Ο O O

பயிற்சியாளரும் நடுவரும்

பயிற்சியாளரும் நடுவரும் விளையாட்டுக்களின் செம்மைக்கும் சீர்மைக்கும் தான் பணியாற்றுகின்றார்கள். அடிப்படை ஒன்றுதான் என்றாலும் முடிவில்தான் மாறுபடுகின்றார்கள்.

விளையாட்டு வீரர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுபிடித்து, தண்டிப்பது நடுவரின் கடமை. விளையாட்டு வீரர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுபிடித்து, திருத்தி முன்னேற வைப்பது பயிற்சியாளரின் கடமையாகும்.

Ο O O