பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காந்தியின் இளமை உணர்வுகள்

ரம் சந்த்காந்தி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். தனது தந்தையை இரவிலே கண்போல காத்து அவருக்குரிய பணிகளைச் செய்து வந்தார் காந்தி!

பகலிலே காந்தி பள்ளிப் படிப்புக்குச் சென்ற பின்பு, நோயாளிக்குரிய சேவைகளை அவரது மனைவி புத்லி பாயும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த கஸ்துரி பாயும் செய்து வருவார்கள்.

ஒரு நாள் இரவு! தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் காந்தி அவசரம் அவசரமாகச் செய்தார்! ஆசையோடு தனது படுக்கை அறைக்குச் சென்று கர்ப்பிணி கஸ்தூரி பாயைத் தட்டி எழுப்பினார்; சில நிமிடங்களுக்குள் அவரது தந்தையார் இறந்து விட்ட செய்தி காந்தி அறைக்கு வந்தது!

ஓடினார் தகப்பனார் அறைக்குக் காந்தி! பாவம் கரம் சந்த், காலமாகிவிட்டார். காந்தியடிகள் மிகவும் வேதனைப்பட்டு சிற்றின்ப ஆசையால், தந்தையின் கடைசி நேரத்தில் அவருக்குப் பக்கத்தில் இருக்க முடியவில்லையே என்பதை எண்ணி எண்ணி கண்ணீர் விட்டு வருத்தப்பட்டார் இளம் வயதுக் காந்திக்கு இந்தச் சோகம் நீண்ட நாள் தனது நினைவை விட்டு அகலவில்லை. சத்திய சோதனை நூலில் அதைக் குறிப்பிடுகிறார்.

தந்தை மறைவுக்குப் பின்கஸ்தூரி பாய்க்கு முதல் குழந்தை பிறந்தது. சில மணி நேரம் கழித்து அதே அறையிலேயே