பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சொல்லிவிடட்டும், அந்தக் காலத்தில் உள்ள பழக்க வழக்கங்களை மட்டுந்தான் பின்பற்ற வேண்டும், என்றாவது நிர்ணயம் செய்யட்டும்.

அப்படி ஏதாவது ஒரு காலத்தை அந்தக்காலம். என்று தீர்மானித்து விட்டாலும், அதன்படி நடக்க, வாழயாராலும் முடியாதே!

அந்தக்காலம் போலவே இந்தக்காலத்திலும் நடக்கத்தான் வேண்டுமென்றால், காஞ்சிபுரத்திலுள்ள நான் இந்தத் திருமணத்திற்கு வரவேண்டுமானால், நான்கு நாள் முன்னதாகவல்லவா புறப்பட்டு இருக்கவேண்டும். கட்டுச்சோறு கட்டிக்கொண்டு கட்டை வண்டியில் பிரயாணம் செய்யவேண்டும். அல்லது கால்நடையாக காடு மேடு சுற்றித்தானே வந்தாகவேண்டும். ஆனால் இன்று அப்படி நடக்க முடியுமா? அல்லது நடப்பதுதான் நல்லதா?

இராமன் காலந்தான் அந்தக்காலம் என்று முடிவு கட்டினால் அந்த நாளைப் போலவே இந்த நாளிலும் வாழ முடியுமா? வாழத்தான் வேண்டுமென்றாலும் முடியுமா? இராமர் காலத்தை நல்லகாலம் என்று போற்றிப் புகழ்பவர்களால்கூட அப்படி வாழ முடியாதே!

இராமர் காலத்தில் இரயிலும் கிடையாது, ஆகவே ரயில் கூடாது என்று இந்த நாளில் தள்ளிவிடமுடியுமா? அல்லது இராமரே ஏறாத ரயிலில் நாம் ஏறுவதா? என்று ரயிலில் ஏறாமல் எத்தனை இராமபக்தர்கள் இருக்கிறார்கள். இருக்க முடியும்! இராமர் காலத்தில் இல்லாத ரயிலில் ஏறித்தானே இராமேசுவரம் போகிறார்கள். அதைப்போலவே அரிச்சந்திரன் காலத்தில் ஆகாய-