பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


றால் பலம் பொருந்திய பிரஞ்சுசர்காருடன் போர் என்று பொருள் வஞ்சனையில் கைதேர்ந்தவர்களுடன் புன்னகைப் புலிகளுடன் நயவஞ்சக நரிகளுடன் போர் தொடுக்க வேண்டும் இணையில்லாத வீரம், ஏழைக்காக எதையும் சகித்துக் கொள்ளும் துணிவு நீள்வையமே எதிர்த்தாலும் அஞ்சாமல் நீதிக்காகப் போரிடும் பண்பு இவை வேண்டும் போக போக்கியத்தில் புரண்டு கொண்டிருந்தவர்கள் ஏன் தமது சிறு விரலையும் தூக்கவில்லை! அவர்களின் அலுவல் அதுவா? மது நிறைந்த கோப்பை மதுரமொழி வழியும் அதரம் மயக்கமூட்டும் கண்கள், இவைகளில் மனதைப் பறி கொடுத்தவர்களுக்கு ஒரு டிரைபஸ் அக்ரமமாகத் தண்டிக்கப்பட்டது பற்றி என்ன கவலை!

பாவம்! டிரைபஸ், எவ்வளவோ கண்ணியமாக வாழ்ந்து வந்தவன் கம்பீர புருஷன் அவன் கதி கடைசியில் ஆயுட் தண்டனை!

என்ன செய்யலாம சட்டப்படி உயர்தர நீதி மன்றத் தார் விசாரித்தல்லவா தண்டித்தனர் அரசாங்கத்தின் இராணுவ இரகசியத்தையல்லவா டிரைபஸ் வெளிப்படுத்தி விட்டான் சாதாரண குற்றமல்லவே!

செய்திருப்பானா? டிரைபஸ் உண்மையில் குற்றவாளி தானா?

இல்லாமலா தண்டித்தார்கள் தக்க ருஜு இருந்ததால் தான் நீதிபதிகள் தண்டித்தனர்

இவ்வளவு தான் டிரைபசைப் பற்றிய பேச்சு மாளிகை கொலுமண்டபம் நிர்வாக நிலையங்களில் எவ்வளவாவது பேசப்பட்டதற்குக் காரணம்; தீவாந்திர சிட்சை பெறுவ-