பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

நூலகம் திறக்கப்பட்டது. 1812-இல் நடந்த போரில் வாசிங்டன் நகர் எரியூட்டப்பட்டபொழுது இந்நூலகம் அழிந்தது. அடுத்து தாமசு செபர்சன் என்பவர் சேகரித்து வைத்திருந்த நூல்கள் யாவும் அரசியலாரால் வாங்கப்பட்டன. இந்நூல்கள்தான் இன்றையக் காங்கிரசு நூலகத்தின் வித்துக்களாகக் கருதப்படுகின்றன. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க நாட்டுக் கல்வித் துறையிலே ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இத்துடன் பொதுமக்களுக்காக அவர்களது வரிப்பணத்திலிருந்து பொது நூலகங்கள் திறக்கப்படவேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. இந்த அடிப்படையில் திறக்கப்பட்ட முதல் பொது நூலகம் பாச்டர் நகர் நூலகமாகும். பின்னர் மாசாசுசெட்சு (Massachusetts) மாநிலத்தார் கி.பி. 1851-இல் கொண்டுவந்த நூலகச் சட்்்் டதடதடதினால் மாநிலத்திலிருந்த நகர்களிலெல்லாம் பொது நூலகங்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து பத்தொன்பது மாநிலங்களில் நூலகச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இருபதாவது நூற்றாண்டில்

இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தினை என்றும் எவரும் மறக்கவே முடியாது. இங்கிலாந்து நூலக வளர்ச்சிக்காகப் பெருநிதி வழங்கிய வள்ளல் ஆண்ரூகார் நிக் அமெரிக்க நாட்டிற்கும் நாலரை மில்லியன் டாலர்களைக் கொடுத்துதவினர். இவர் கொடுத்த பெருநிதியின் துணைகொண்டு 1,681 நூலகக் கட்டடங்கள் கட்டித் தரப்பட்டன. மேலும் பல செல்வச் சீமான்கள் வரையாது வழங்கினமையால் பொது நூலகங்கள் பல அடுத்தடுத்துத் திறக்கப்பட்டன. பிறர் தங்களைப் பாராட்டவேண்டும் என்பதற்காக ஒரு சிலர் தாங்கள் சேகரித்து வைத்திருந்த நூல்கள் பலவற்றைப் பொது